தமிழனை பிறந்ததிலிருந்து ஏமாற்றி வரும் திமுக சமீபத்தில் தன் கூட்டனி கட்சிகளின் பிரதிநிதிகளை இலங்கைக்கு (ஈழத்திற்கு அல்ல)அனுப்பியது இப்போதைய சுடான ஏமாற்றுவேலை என்பதை அனைவரும் அறிந்தோம். இதில் காங்கிரசார்களை எவனும் கேள்விக்கேட்க மாட்டான் ஏனெனில் அவன்கள் அதற்கு தகுதியற்றவன்கள் என்பதை அறிந்தேவைத்திருக்கிறோம். அதேப்போல் கருணாநிதிக்கு ஏதோ ஒரு சந்தர்ப்பதில் பிறந்த கனிமொழியையும் எவனும் கேள்விக்கேட்க மாட்டான் அவரும் அப்பா சொன்ன்ப்படி நடித்துவிட்டு வந்திடுவார் என தெரியும். எஞ்சியிருப்பது எங்கள் தலைவர் திருமா மட்டுமே.

திருமாவின் ஒவ்வொரு அசைவையும் கேள்விகேட்பதால் எங்களுக்கு பெருமைதான். இதுவே தமிழன் திருமாவளவன் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை காட்டுகிறது. இருப்பினும் சமீபத்தில் அதாவது கருணாநிதி எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிருத்தி தன் சாணக்கிய திருட்டு விளையாட்டிற்காக இலங்கை இட்லர் இராசபக்க்ஷேவிடம் மன்றாடி அனுமதிபெற்று தன் சார்பில் ஒரு குழுவை ஏற்பாடு செய்து அதற்கு கூட்டணி கட்சிகளின் குழு என்கிற அடைமொழியை வழங்கி. அவர்களை தனியே அழைத்து அங்கே எப்படி விசுவாசமாக நடந்துக்கொள்ளவேண்டும் என்கிற கதை, வசனங்களையும் எழுதிக்கொடுத்து அனுப்பினார் என்பது வெட்ட வெளிச்சம். இதில் எவருக்கும் மாற்றுக்கருத்திலை என்பதையும் அறிவோம்.

அதிலும் குறிப்பாக விடுதலைசிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை இந்தக்குழுவில் சேர்த்தது கருணாநிதியின் ஒப்பற்ற சாணக்கிய கயவாளித்தனத்திற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு. கருணாநிதி எதிர்ப்பார்த்ததைவிட அதிகமாகவே நடந்தது எனலாம். ஏனெனில் குழுவின் முழுகட்டுப்பாட்டையும் தனது கையில் வைத்திருந்தாலும் தமிழனின் எல்லா கேள்விக்கணைகளும் திருமாவை நோக்கியே திரும்பிதால் கருணாநிதி உள்ளுக்குள் துள்ளிகுதித்து கைத்தட்டிக்கொண்டிருக்கலாம்.

சமீபத்தில் ராஜபக்சே நம் தொல்.திருமாளவனை முகத்துக்கு நேராகவே, இவர் பிரபாகரனின் நண்பர் இவர் அன்று பிரபாகரனோடு இருந்திருந்தால், தொலைந்திருப்பார் என்று கூறியிருக்கிறான். அது அவனின் நாகரீகம்,அவனிடம் நாம் இதற்குமேல் எதிர்ப்பார்க்கக்கூடாது. சரி அவன் அப்படிக்கூறியதற்கு இவர்கள் எதிர்ப்பார்த்தது என்ன? உடனே திருமா எழுந்து அவனின் சட்டையை பிடித்து பளார் பளார் என்று அறைந்திருக்கவேண்டும் அல்லது இப்போது இங்குதானே இருக்கிறேன் முடிந்தால் கையைவைத்துப்பார் என்று “பாபா” பாணியில் கத்தியை வீசியிருக்கவேண்டும். இதையெல்லாம் செய்யாமல் தன்னால் குழுவிற்கு எந்த பாதகமும் வந்துவிடக்கூடாது, வந்தால் எதிர்காலத்தில் எந்த குழுக்களையும் அனுமதிக்க மாட்டான்,மேலும் குழுவின் தலைமைக்கு கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்று அவன் சொன்னதை புன்னகையுடன் ஏற்று தன்னால் எந்தவித பாதிப்பும் குழுவிற்கு வந்துவிடக்கூடாது என்று சமயோஜிதமாக நடந்துக்கொண்டது இவன்களுக்கு பெரும் தவறாக பட்டுவிட்டது.

அப்படியே திருமாவளவன் ஏதாவது உணர்ச்சிவயப்பட்டு கூறியிருந்தால் அதனால் ராசபக்ஷே கோபமடைந்து குழுவை யாரையும் சந்திக்கவிடாமல் வெளியேற்றியிருந்தால் திருமா இப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு எல்லாவற்றையும் கெடுத்துவிட்டார், இல்லாவிடில் இப்படி நடந்திருக்கும், அப்படி நடந்திருக்கும் என்று அப்போதும் திருமாவை திட்டுபவன் இதே தமிழன் தான். திருமாவளவன் அந்த குழுவில் போகாமலேயே இருந்திருக்கலாம் என்பதே நேர்மையாளர்களின் கருத்து,கருணாநிதியின் வற்புறுத்தலுக்கிணங்கியே அவர் போயிருக்கலாம், இந்த குழுவால் முகாம் தமிழருக்கு எதுவும் நல்லது நடக்காது என்பதும் திருமாவுக்கு தெரியும்,ஆனால் முகாம் மக்களை சந்திக்க இந்த குழுவை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டார் எனபதை எவரும் உணரவில்லை, ஏனெனில் திருமாவை நோக்கி எவனும் கேள்விகேட்கலாம் திருமா என்பது இவர்களுக்கு கிள்ளுக்கீரை மாதிரி. எனவேதான் தங்கள் அரிப்புகளை சில பத்திரிக்கைகள், இணைய தளத்திலும் கூட சிறுப்பிள்ளைத்தனமாக கேலி செய்தும்,கேலிப்படங்களை வெளியிட்டும் சொரிந்து மகிழ்வதை காண்கிறோம்.

திருமாவளவன் என்ன ராசபக்ஷே அரசுடன் மோத தரைப்படை, விமானப்படை, கப்பற்படை,காலாற்படையோடவா போனார்? அல்லது குறைந்த அளவு அவன் சட்டையை பிடித்து கேள்விகேட்பேன் என சபதம் ஏற்றுவிட்டுப் போனாரா? உண்மையான அக்கறையோடு போன ஒரேயொரு அரசியல்வாதி திருமா தான்.

எனக்கு ஒரு கேள்வி, அப்படியே திருமாவை நோக்கி ராசபக்க்ஷே கூறினான் என்றால் குழுத்தலைவன் என்கிற முறையில் பாலுதானே அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கவேண்டும். அவர் அப்படி தெரிவிக்காததை யாராவது கேள்விக்கேட்டானா? இல்லையே மாறாக இன்ப உல்லாச சுற்றுலா போனதுப்போல் ராசபக்ஷேவுக்கு பொன்னாடை போர்த்தி, பல் இளித்து, ராசபக்சேவை கட்டிப்பிடித்து, பரிசுப் பொருட்களை கொட்டுத்து, வாங்கி கொண்டார்களே. இத்தனை செயல்களிலும் திருமா தள்ளியே நின்றுக்கொண்டிருக்கிறாரே அதை எவனாவது எழுதினார்களா? குழுவில் வந்த ஒருவரை அவமரியாதை செய்தால் அது குழுவையே அவமரியாதை செய்தததாக தானே அர்த்தம் இதை எவனாவது கேட்டானா?

மேலும் குழுவில் வந்த பத்து பேரை பற்றி பயணத்திற்கு முன்பே தகவல்களை கேட்டு வாங்கியிருக்கிறான் ராசபக்சே. குறிப்பாக திருமாவை மட்டும் தீவிரமாக கண்காணிக்க தனது கூலிப்படைக்கு உத்தரவிட்டிருக்கிறான், இதுவே அவரின் பயண வெற்றிதானே. அதையும் மீறி அவர்கள் குறிப்பிட்ட முகாம்களில்லாமல் திருமாவே ஒரு சில முகாம்களின் பெயர்களைச் சொல்லி பார்க்கவேண்டும் என்றதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறதே, அதை எவனாவது எழுதினீர்களா? தனக்கு கிடைத்த வாய்ப்பில் சிலரிடம் பேசியதாகவும், முகாம் மக்கள் சொல்ல இயலா துயரத்தில் இருப்பதாக்வும் அறிந்து சொன்னாரே அதை எவனாவது எழுதினீர்களா?

திருமாவை ராசபக்ஷே அவமான படுத்தியதாக கூறி கூறி வியாபார ஊடகங்களும், தன்னல அரசியல்வாதிகளும், தொடர்ந்து அவரை அவமானப்படுத்துவதை பொருக்க இயலாது. ஏனெனில் கருணாநிதியை அவமான படுத்தினால் அது ஒரு கட்சிஎன்கிற எல்லைக்குள் அடங்கிவிடும் அவருக்கென்று எந்த ஒரு இனமும் கிடையாது,ஆனால் திருமா என்பவர் ஒரு பெரும் இனத்தலைவர் மற்றுமன்று ஒட்டுமொத்த தமிழர்களின் பிரதிநிதியாக எந்த வேறுபாடும் இல்லாது,கூட்டணி கட்சிகளில் இருந்தாலும் தன் கருத்துகளை துணிந்து எதிர்ப் பதிவுசெய்பவர் உண்மையில் அவரை ராசபக்ஷே அப்படி சொல்லியத்தற்கு நமது பதிலடியாக நம் எதிர்ப்பை கண்டிப்பாக காட்டியிருக்கவேண்டும்.

அவன் திருமாவை நோக்கி அப்படி சொல்லவில்லை தமிழீழ ஆதரவாளர்கள் அனைவரையும் நோக்கியே சொல்லியிருக்கிறான் நீங்கள் அனைவரும் பிரபாகரன் ஆதரவாளர்கள் நீங்கள் அனைவரும் களத்தில் நின்றிருந்தாலும் நான் அனைவரையும் கொண்று குவித்திருபேன் அப்படி செய்திருந்தால் இன்று எனக்கு எந்த எதிர்ப்பும் இருக்காது என்கிறதுதானே அந்த நிகழ்வில் ராசபக்ஷேவின் கிண்டல்! இதை எவனாவது பதிவு செய்தீர்களா?

உண்மையில் திருமாளவன் என்ற ஒற்றைத் தமிழனுக்கு எந்த அவமானமும் ராசபக்ஷேவால் ஏற்பட்டுவிடவில்லை, அவர் ஈசல் அல்ல இரும்பு, அது நம் அனைவருக்கும் ஏற்பட்ட அவமானம் என்று கருதாமல் இருப்பதுக்கூட இன ஒதுக்குதல் என்றே ஆகிறது. சாதி வெறியென்றே ஆகிறது. இதே கனிமொழிக்கு நேர்ந்திருந்தால் பாலுவை கருணாநிதி பிய்த்து எடுத்திருப்பார், திமுக தமிழனும் கோவணங்களை உறுவியதுப்போல் வானுக்கும், பூமிக்கும் குதித்திருப்பார்கள் அப்போதும் திருமாவின் தொண்டர்கள் ராசபக்ஷே கொடும்பாவி எரித்திருப்பார்கள், சன்,கலைஞர்,மெகா டீவிகள் ஆட்டம் பாட்டங்களை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு கண்டன காட்சிகளை நடத்தியிருக்கும் “திருமா” என்பதால் அத்தனையையும் கண்டுக்கொள்ளாமல் சொகுசாக ஒதுங்கிகொண்டார்கள் அவ்வளவுதான்.

இதைவைத்துக்கொண்டே தமிழகம் ஏன் உலகம் முழுவதும் ராசபக்ஷே கொடும்பாவி எரிப்பு உள்பட முடிந்தவரை நம் எதிர்ப்பை பதிவுசெய்திருக்கலாமே.அப்படி எதையுமே செய்யாமல் திருமாவை மட்டும் குறிவைத்து கேள்விகளை எழுப்பி பிரச்னையினை திசைத்திருப்பிவிட்டால் போதுமா. இப்படி திசை திரும்புதலைதானே திமுக விரும்புகிறது, காங்கிரஸ் விரும்புகிறது அதற்கு நாம் இடம் கொடுக்கலாமா? சரி இருதியாக ஒன்று இலங்கை சென்று வந்த குழுவின் சார்பாக முழு அறிக்கை வெளிவந்துவிட்டதா? என கேட்போம்.இதுவரை திருமாவை தவிர யாரும் ஊடகங்களுக்கு நேர்காணல் அளிக்கவில்லையே புரிகிறதா? இல்லை புரியவில்லை என கண்டுக்கொள்ளாமல் இருக்கலாமா?

திருமாவளனின் அரசியலை ஈழத்தமிழர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள் உணரத்தவறி இருப்பது தமிழகத் தமிழன் தான். அவனும் விரைவில் உணர்வான் என்கிற நம்பிக்கையில்…

உங்கள் கவிமதி

புலம்பெயர்ந்த மக்களில் விடுமுறை நாட்களை அவரவர் தன்நல போக்கிற்காவே கழித்துக்கொண்டிருக்கும் சூழலில் தங்களுக்காக எத்தனையோ வெள்ளிக்கிழமைகள் இருக்கின்றன நம் சமூகத்திற்காக ஒரு வெள்ளிக்கிழமையை ஒதுக்கலாம் என அபுதாபி வாழ் வடநாட்டு தலித் மக்களை ஒருங்கிணைத்து நிகழ்வுகளை நடத்திவருவது அபுதாபி அம்பேத்கர் சர்வதேச அமைப்பு. நேற்று (16 அக்டோபர்) அன்று சார்ஜாவில் கடந்த ஆண்டுகளைப்போல் இந்த ஆண்டும் “சம்மசக்ர பிரவார்தன தீன்” என்கிற அம்பேத்கர் நினைவுநாளை கொண்டாடினார்கள்.

இப்படி அம்பேத்கர் பற்றி மட்டுமே நிகழ்வுகளை நடத்திக்கொண்டிருந்தவர்களுக்கு தங்களின் முதல்வர் மாயாவதி ஏன் தீடீரென்று பெரியார் என்ற ஒருவரை ஆதரிக்கிறார் அவருக்கு சிலைவைக்கிறார் என்கிற கேள்வி எழவே, பெரியார் பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் கடந்த முறை அம்பேத்கர் நிகழ்வில்போது பெரியார் சம்மந்தப்பட்டவர்களை தேடியிருக்கிறார்கள் அய்க்கிய அரபு நாட்டில் பெரியாரா? என சிலர் கிண்டலுடன் தவிர்க்க (எங்கெல்லாம் பார்ப்பனியம் இருக்கிறதோ அங்கெல்லாம் பெரியார் இருப்பார் என மறந்துவிட்டனர்போலும்) இனம் இனத்தை சேரும் என்கிற தத்துவத்தின்படி இறுதியாக நம்மிடம் வந்துசேர்ந்தனர். கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்டு அமீரகத் தாய்மண் வாசகர் வட்டம் சார்பாக நாம் களமிறங்கினோம்.

கடந்த ஆண்டு பெரியார் குறித்து அவர்களுக்கு அறிமுகம் செய்தபின் இந்த ஆண்டும் நம்மை அழைத்திருந்தார்கள் நாமும் கலந்துக்கொண்டு பெரியார் குறித்தும் அவர்தம் தலித் அரசியல் குறித்தும் பேசினோம். நிகழ்விற்கு அபுதாபியை சேர்ந்த திரு.சங்கர்ராஜ் தலைமையேற்க சிறப்புவிருந்தினராக கடையநல்லூர் திரு.சத்திஷ்மாதவன் அவர்கள் கலந்துக்கொண்டு பெரியார் குறித்து விரிவான தெளிவான உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தினார். அதை தொடர்ந்து அமைப்பின் தலைவர் திரு.சே.ரெ.பட்டணம் மணி தனக்கே உரிய முறையில் பெரியார் குறித்தும் அம்பேத்கர் குறித்தும், குறிப்பாக இரட்டைவாக்குறிமைக்கு எதிரான காந்தியின் துரோகம் குறித்தும் விரிவாக இந்தியில் உரையாற்றினார். நிகழ்வில் திரு.கவிமதி ஊத்தாபுரம் சுவர் பற்றின நிகழ்வுகளை விளக்கி தொடர்ந்து குஜராத் காந்திநகர் தலித் மக்களின் வாழ்வியல் ஆதாரங்களை கொண்டு எடுக்கப்பட்ட குறும்படத்தினையும் திரையிட்டார்.

அதை தொடர்ந்து அம்பேத்கர்,பெரியார் உறவு அவர்கள் நம் சமுதாய மேம்பாட்டிற்காக உழைத்த நிகழ்வுகள் என தமிழர்களாகி நாம் பெரியாரின் தொடர்ச்சியாக தலித் அரசியலை எவ்வாறு நடத்திக்கொண்டிருக்கிறோம் என்பதனையும் விளக்கினோம். நம் அமைப்பின் சார்பாக இறுதியாக செயலர்.திரு.முத்தமிழ்வளவன் உரைநிகழ்த்தியதன்பின் பெரியார் குறித்த தங்களது பார்வையினையும், தாங்கள் இதுவரை புரிந்துக்கொண்டவற்றையும் இனி பெரியார், அம்பேத்கர் வழியிம் நாம் நம் சமூகத்திற்கு எப்படி செயலாற்ற வேண்டும் என்பதுபற்றியும் அம்பேத்கர் அமைப்பினர் விரிவாக பேசியும், விளக்கப்படங்களை காட்டியும் நிகழ்வினை தொடர்ந்து சிறப்பாக நடத்திச்சென்றனர்.

நிகழ்வில் நிரைவாக அம்பேத்கர்,பெரியார் வாழ்த்துப்பாடலும் அதை தொடர்ந்த ஏற்புரையில் வடமாநில மக்களுக்கும் பெரியார் குறித்தும் தலித் அரசியலில் நம் பங்குகுறித்தும் நாம் விளக்கியது விரிவானதாகவும், நிறைவுடனும் இருந்ததாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நமக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்ள விழா இனிதே நிறைவுப்பெற்றது.

விழாவில் கலந்துக்கொண்ட நம்மவர்கள்

திரு.சே.ரெ.பட்டணம் மணி (தலைவர் தாய்மண் வாசகர் வட்டம்) திரு.முத்தமிழ்வளவன் (செயலர் தாய்மண் வாசகர் வட்டம்)

திரு.கவிமதி (செயலர் அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை)

திரு.சங்கர் ராஜ் (அபுதாபி ஒருங்கிணைப்பாளர் தாய்மண் வாசகர் வட்டம்)

திரு.சத்தீஷ் மாதவன் (நிகழ்வின் சிறப்பு விருந்தினர்)

ஓவியர் அசோக்,

திரு.விவேகானந்தன்,

திரு.கருணாநிதி,

திரு.குருசாமி சார்ஜா

திரு.குமார் (நாம் தமிழர் அமைப்பு)

திரு.முத்துக்குமரன் (இணைசெயலர் அ.த.க.பேரவை,

மற்றும் சிந்தனையாளர்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

கடந்த வாரம் புதுச்சேரியில் நடைபெற்ற துளிப்பா ஆய்வரங்கத்திற்கு என் பங்களிப்பாக இந்த கட்டுரையினை அனுப்பியிருந்தேன். துளிப்பா ஆய்வரங்கத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை இதோ உங்களுக்காக
=============================================================================================

துளிப்பாவும் புதுச்சேரியும்.

மனித இனம் தோன்றியதுமுதல் வாழ்க்கையின் ஒரு அங்கமாக தொடர்ந்து வருவது இலக்கியம். காலநிலைகளுக்கு ஏற்றார்ப்போல் இலக்கியத்தின் வடிவங்கள் பலதரப்பட்டு வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது ஒவ்வொரு வடிவங்களும் அதனதன் போக்கிற்கு தன்னை உருவாக்குபவர்களை பெரிதாக பேசவைத்திருக்கிறது, இருப்பினும் இலக்கியத்தை தன்போக்கிற்கு வளைத்தும், மக்களைவிட்டு தள்ளிவைத்தும் இவர்தான் அரசவைக்கவிஞர் இவர்தான் பாடவேண்டும் என்கிற ஒருதலை சிந்தனையினை ஏற்படுத்தியும், இலக்கியத்தின் அடர்ந்த பகுதியினை காட்டி உன்னால் இதுப்போல் இலக்கியம் படைக்க முடியாது அல்லது நீ படைப்பதெல்லாம் இலக்கியமே இல்லை என்கிற விதங்களில் இலக்கியத்தையும் தனக்கேற்றார்ப்போல் அடிமைபடுத்தி மக்களை ஏமாற்றி வந்த கால கட்டங்களும் வரலாற்றின் பதிவில் இருக்கிறது.
இலக்கியத்தின் வடிவங்கள் என நமக்கு அறிமுகம் செய்யப்பட்டவைகளில் திருக்குறள் தொடங்கி எண்ணற்ற ‘பா’ வகைகளும் அடங்கும். இவற்றில் அரசர்கள் காலத்தில் அவர்களின்மேல் துதிப்பாடவே பல இலக்கிய வடிவங்கள் பயன்படுத்த்தப்பட்டு வந்தன என்பதையும், அப்படி அரசர்களை துதிப்பாடியே பலர் பஞ்சம் பிழைத்துவந்தனர் என்பதையும் நாம் இதுவரை படித்துவந்த பாடநூற்களில் பதியப்பட்டிருக்கும் பாட்டுகளை வைத்து அறிந்துக்கொண்டோம். இப்படி பட்ட இலக்கியமானது ஒரு கட்டத்தில் மக்களுக்கானது என்கிற பரந்த இடத்தை விட்டு பொருளுக்காக,புகழுக்காக,பதவிக்காக என தவறான வரலாற்று பதிவுகளாகவும் இருப்பதை நாம் அறிவோம்.
இவ்வகை இலக்கியங்களில் கடந்த காலம் வரை நம்மை தொடர்ந்துவந்தவை மரபுக்கவிதை வகைகள்.
இந்த மரபு கவிதைகள் என்பன மக்களிடமிருந்து மக்களுக்காக தோன்றி பின் மெல்ல மெல்ல அரசவை நோக்கி பயப்பட்டு பின் அரசர்களின் துதிப்பாடுவதிலேயே சரணடைந்துவிட்டன எனலாம். ஒரேயொரு ”யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்கிற கனியன் பூங்குன்றனாரின் சொல்லைவைத்துக்கொண்டு காலம் தள்ளிக்கொண்டிருந்த வேலையில் நம் தலைமுறைக்கென கிடைத்த கவிஞர்களில் பாவேந்தர் பாரதிதாசன் போன்றவர்களின் கவிதைகள்தான் மக்களிடையே சென்று சேர்ந்திருக்கிறது எனலாம். இவர்களுக்கு முன்னால் படைக்கப்பட்ட இலக்கியங்களில் பெரும்பான்மையானது வெரும் சந்தங்களையும், இலக்கண வறையரைகளையும் தாண்டி மக்களை சேரவில்லை. எனவே தான் வரலாறாக பதியப்பட்டிருக்கும் இவ்வகை மரபுக்கவிதைகளில் பெரும்பாலும் அரசர்களை  புகழ்வதிலும் அதற்கு அடுத்தார்ப்போல் ஒரு சில ஆதிக்க இனங்களின் வரலாற்று பின்னணியை மட்டும் மையமாகக் கொண்டும் இயங்கி வந்திருக்கிறது என்பது உண்மை.

இதில் குறிப்பாக பல மரபுக்கவிதைகள் சமண, சைவ, வைணவ இலக்கியங்களாக பார்க்கப்பட்டும், பதியப்பட்டும் இருப்பதால் இவை மக்களின் வாழ்வியல் நிலைகளை மாற்ற பயன்படாமல் தான் சார்ந்த இனத்தின் பழக்கவழக்கங்கள் தொடங்கி தாங்கள் வணங்கும் தெய்வங்களை வழிப்படுவதற்கு மட்டுமே பாடபட்டுவந்திருக்கின்றன. இதில் குறிப்பாக குறிவைத்து ஆதிக்க இனங்களால் மக்களிடமிருந்து இலக்கியங்கள் பிரித்துவைக்கப்பட்டு சக மக்களை, பாடுபவர்களாக இல்லாமல் வெரும் பார்வையாளர்கள் என்கிற தூரத்திலேயே நிறுத்தியதோடு அல்லாமல் இன்னும் மக்களின் பெரும் கூட்டத்தினரை கேட்கவே அனுமதிக்காத ஆதிக்கவெறியும் இருந்துவந்ததால் அவ்விலக்கியங்களை நமக்கானது அல்ல என தூக்கியெறியவும் மக்கள் தயங்கவில்லை. இப்படி மக்களைவிட்டு தூர தூரமாக ஒதுக்கியதால் இன்று மரபுக்கவிதை என்கிற வடிவம் மாறி மாறி மக்களே அவற்றை ஒதுக்கியதால் மக்களுக்கான இலக்கியம் தனது ஓடுபாதையை தாண்டி மக்களிடையே புதுக்கவிதைகாக உள்ளே நுழைந்தது எனலாம்.

புதுக்கவிதை தொடங்கிய காலகட்டதில் கவிதைகள் இறைமொழி அதை மாற்றக்கூடாது என ஆதிக்க இனங்களும், இலணக்கம் கெட்டுவிடும் என ஒரு சில இலக்கியவாதிகளும் ஏனோ அந்த வடிவத்தை எதிர்த்தே எழுதியும், பேசியும் வந்தனர். இதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் அப்பட்டமான அபத்தங்களாக இருந்ததன.அப்படி எதிர்த்தவர்களே பின்னாலில் புதுக்கவிதையில் கோலோச்சிய வரலாறும் இருக்கிறது.ஆனால் கவிஞர் மீரா போன்றவர்கள் புதுக்கவிதை வடிவத்தை வளர்த்தடுக்க வெகுவாக பாடுபட்டு அந்த முயற்சியில் வெற்றியும் கண்டார் எனினும் புதுக்கவிதையால் வளர்ந்தவர்களோ தங்களுக்கு இணையாக புதியதாக கவிஞர்கள் வந்துவிடக்கூடாது என்பதில் மிககவனமாக இருந்தார்கள் என்பதையும் நாம் கருத்தில் கொள்ளல் வேண்டும். ஆனால் இப்படி இப்படியான இடையூறுகள் இருந்தாலும் புதுக்கவிதை மக்களிடையே வெகுவாக பரந்து பரந்து சென்றிருக்கிறது. மரபுக்கவிதைகள் விட்ட இடங்களை நிரப்பியதாலும், மக்களுக்கான கவிதை மக்களால் மக்களுக்காக பாடப்பட்டதாலும் புதுக்கவிதை இலகுவாக மக்களிடையே புழக்கத்திற்கு வந்தது. ஏனெனில் புதுக்கவிதைக்கென இலக்கண கட்டுபாடுகள் இல்லை என்பதே இதற்கான நேரடி காரணம் என்பதே உண்மை. இதை முன்வைத்தே நாட்டில் இன்று புதுக்கவிஞர்கள் தொகை மக்கள் தொகையில் பாதியாக இருப்பதாக விளையாட்டாக சொல்லுவதும் உண்டு.இந்த வகையில் புதுக்கவிதையின் தாக்கம் கவிஞர் மு.மேத்தாவின் ”கண்ணீர்ப்பூக்கள்” என்ற தொகுப்பிற்கு பிறகு பட்டித்தொட்டியெல்லாம் பேசப்பட்டு இளைய தலைமுறையில் எண்ணற்றவர்களை புதுக்கவிஞர்களாக்கி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.

இனி இன்னொரு வடிவம் வரவேபோவதில்லை என்கிற அளவில் புதுக்கவிதை கோலாச்சிக்கொண்டிருக்க அதன் தலையில் இடி விழுந்ததைப்போல் ஜப்பானியர்களின் ஓசை வடிவமான ஹைக்கூ என்கிற வடிவம் மக்களுக்கு அறிமுகமாகிறது. வழக்கத்தைவிட கூடுதலாக எதிர்ர்புக்குரல் என்பது அறிவுஜீவிகளிடத்திலிருந்து ஹைக்கூ வடிவத்திற்கு வந்தாலும் அத்தனையையும் தூக்கிவிழுங்கி தன் இடத்தை பிடித்துக்கொண்டது ஹைக்கூ. ஹைக்கூவில் புகழ்பெற்ற ஐப்பானிய ஹைக்கூ கவிதையின் முன்னோடிகளாக மட்சுவோ பாஷோ, யோசாபூசன், இசா, ஷிகி என்பர்வர்கள் எழுதிய ஹைக்கூ கவிதைகளை தொகுத்து தமிழில் கவிஞர் அமரன் ”நால்வர் 400” என்று ஒரு தனி நூலாக வெளியிட்டிருக்கிறார். இருப்பினும் தமிழில் முதல் ஹைக்கூ நூலாக கவிஞர் அறிவுமதியின் ”புல்லின் நுனியில் பனித்துளி” நூல் அறியப்படுகிறது, அந்து நூலுக்கு அணிந்துரை வழங்கிய கவிக்கோ; ஒரு வடிவத்தை தமிழில் கொண்டுவருகையில் அதன் அத்தனை நுண் விடயங்களையும் அப்படியே கொண்டுவர வேண்டுமென்கிற அவசியமில்லை மாறாக அந்த வடிவத்தை உள்வாங்கிக்கொண்டு அதை நமது பண்பாட்டிற்கு தகுந்தாற்ப்போல் தேவையிருப்பின் மாற்றியமைத்துக்கொள்ளலாம், அதேப்போல் ஹைக்கூ கவிதை எழுதுபவர் இதனால் சகலமானவர்களுக்கு என்பதுப்போல் அதன் விளக்கத்தையும் தரவேண்டியதில்லை ஏனெனில் ஹைக்கூ கவிதையில் வாசகனும் ஒரு படைப்பாளியாகிறான் எனவே அவனுக்கும் இடம் ஒதுக்கி ஹைக்கூவின் பொருளை உணரும் வகையில் வாசகனை சிந்திக்கத்தூண்டவேண்டும் என்கிற பொருளில் ஹைக்கூ குறித்து தனது பதிவினைவைக்கிறார். இதே ரீதியில் கவிஞர் பொன்.குமார் தனது ஹைக்கூ பற்றிய கருத்தாக வார்த்தை சிக்கனத்தை கடைப்பிடிப்பதோடு தேவையற்ற வர்ணனைகளை தவிர்க்கவேண்டும் எனவும் முன்வைக்கிறார்.

ஹைக்கூ ஜப்பானிய வடிவம்தானே ஒழிய ஜப்பான் மொழியைவிட தமிழில்தான் இதுவரை அதிகம் ஹைக்கூத்தொடர்பான நூல்கள் வெளிவந்திருப்பாதாகவும். வெளிவந்துக்கொண்டிருப்பதாகவும் நாம் அறியப்படுகிறோம். ஏனெனில் ஹைக்கூ வடிவமானது நம் மக்களின் வாழ்க்கை முறையினை மிகத்தெளிவாகவும். தேவையற்ற வர்ணணைகள் இல்லாமலும். மிகச்சுருக்கமாகவும் சொல்ல தகுந்த வடிவமாக இருப்பதாலும், பாடப்படுகிற பொருள் தனக்கானது அல்லது தன் வாழ்வு நிலைகளை முன்னிருத்துகிறது என்று மக்கள் இலகுவாக ஏற்றுக்கொண்டனர் எனலாம். ஹைக்கூ கவிதைக்குறித்து உலக அளவில் பார்த்தாலும் புதுச்சேர்யில் அதற்கு தனி தன்மை கிடைத்திருக்கிறது எனலாம். இதற்கு வரலாற்று பதிவாக ஒன்றை சொல்லியே ஆகவேண்டும் ஆம் ஹைக்கூ நூல்கள் தமிழ்மொழியில் ஏராளமாக வந்தாலும் அதில் புதுச்சேரியில்தான் அதிகமாக வந்திருக்கிறது ஏனெனில் புதுச்சேரி கவிஞர்களில் ஹைக்கூ பாடாத கவிஞர்களோ ஹைக்கூ பற்றி எழுதாத, ஆய்வு செய்யாத இலக்கியவாதிகளோ இல்லை அப்படி எழுதவில்லை என்றாலே அவர் புதுச்சேரிகார இல்லை என்றும் அடித்து சொல்லலாம். இது கவிதையில் தமிழனனுக்கென்று ஒரு இடம் படைத்துக்கொடுத்த பாவேந்தர் பாரதிசாதனுக்கு அவர்தம் ஊரில் கிடைத்த மிகப்பெரிய சிறப்பாகும். இதைச்சொல்ல காரணியாக இருப்பது கவிதையில் எப்படி மக்களுக்கான கவிதைகளை படைத்து சமூக அவலங்களை தோளுரித்துக்கொடுத்தாரோ அதை அப்படியே தங்களது ஹைக்கூவிலும், ஆய்வுகளிலும் புதுச்சேரிக்கவிஞர்கள் தொடர்ந்துவருவதை காணலாம். இது பேராசிரியர்க்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் அறிவு முதிர்ச்சி என்றால் மிகையாகாது.

புதுச்சேரியில் ஹைக்குவிற்கு “துளிப்பா” என்கிற தமிழாக்க பெயரை செல்லப் பெயராக சூட்டியதோடல்லாமல் துளிப்பா(ஹைக்கூ),நகைத்துளிப்பா(சென்றியு),உரைத்துளிப்பா(ஹைபுன்),ஈறுதொடங்கித் துளிப்பா(ஹைக்கூ அந்தாதி),இயைபுத் துளிப்பா(லிமரிக்கூ) ஆகியன குறித்த ஒருநாள் ஆய்வரங்கு புதுச்சேரியிலிருந்து வெளிவரும் “கரந்தடி” இதழ் சார்பாக 11.10.2009 அன்று நடைபெறுவது மேலும் துளிப்பா கவிஞர்களை வளர்த்தெடுக்கவும் ஏற்கனவே எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு மேலும் துளிப்பா பற்றி அறிந்துக்கொள்ள நல் வாய்ப்பாகவும் அமைந்திருக்கிறது. இப்படியொரு வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்து துளிப்பாவிற்காக தொடர்ந்து பல விதங்களிலும் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்திவரும் புதுவைப் பாவலர் சீனு.தமிழ்மணி அவர்களுக்கும் கரந்தடி சார்பாக ஆய்வரங்கம் நடத்தும் குழுவினருக்கும் அமீரகத் தமிழ்க் கவிஞர்கள் பேரவை (துபாய்)சார்பாக வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தோழமையோடு…

கவிமதி
(செயலளர்: அமீரகத் தமிழ்க் கவிஞர்கள் பேரவை)
மின்னஞ்சல்:kavimathy@gmail.com

பார்பனர்களின் அட்டுழியங்கள் பாரீர் குடிஅரசு’வின் கேள்விக் கணைகள்.–ஆரியரா? அவர் அடிமைகளா? 

1. ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு நம் நாட்டிற்குப் பிழைக்க வந்தது யார்? 

2. இராமலிங்கப் பெரியாரை வெட்டிப் பலியிட்டது யார்?

3. நந்தனாரை நெருப்பிலிட்டுக் கொன்றது யார்?

4. திருப்பாணாழ்வாரைத் தீயிலிட்டுக் கொன்றது யார்?

5. யாகத்தில் ஆடு, மாடு, குதிரை, பன்றி, இவைகளைச் சுட்டுத் தின்று சுரா பானமருந்தியது யார்?

6. வருணாச்சிரம தருமத்தை ஆதரிப்பவன் யார்?

7. மனுதர்ம சாத்திரம் எழுதி நம்மை ஏமாற்றி வந்த கூட்டம் எது?

8. புராண ஆபாசக்கதைகளை எழுதி நம்மை ஏய்த்து வந்தவன் யார்?

9. திருப்பதிக்குப் போய் மொட்டையடிக்காமல் திரும்பி வருபவன் யார்?

10. மோட்ச லோகத்துக்கு வழிகாட்டி டிக்கெட் கொடுப்பவன் யார்?

11. திவசம், திதி, கருமாதி, கலியாணம், சடங்குகள் நடத்தி வைப்பவன் யார்?

12. திராவிடன் கட்டிய கோவில்களில் அதிகாரம் செலுத்தபவன் யார்?

13. திராவிடன் கட்டிய சத்திரமானிய வருமானத்தில் உண்டு களிப்பவன் யார்?

14. கஷ்டப்பட்டுக் கோயில் கட்டியது யார்? உள்ளே புகுந்து கொள்ளையடிப்பது யார்?

15. சத்திரம் கட்டியது யார்? மானிய சொத்தில், சாய்ந்து சாப்பிடுவது யார்?

16. பல சாதிகளை உண்டு பண்ணியது யார்?

17. உடன்கட்டை ஏறும்படிச் செய்து பெண்களை வஞ்சித்தது யார்?

18. திராவிடன் ஆசாரத்துடன் பக்தி பண்ணினால் கண்ணைத் தோண்டிக் காட்டில் விட்டவன் யார்?

19. திராவிடன் ஆரியப் பாஷையைப் பேசியதற்காக நாக்கை அறுத்தது யார்?

20. திராவிடனை அரக்கனாகவும், சூத்திரனாகவும், குரங்காகவும் எழுதிவைத்தவன் யார்?

21. திராவிட இனத்தவரை முன்னுக்கு வரவொட்டாமல் முட்டுக்கட்டை போடுவது யார்?

 22. திராவிட நாட்டுப் பிரிவினையைக் கூடாதென்று கொக்கரிப்பவர் யார்?

23. உழைப்பின்றி ஊரார் உழைப்பில் உண்டுகளிப்பவன் யார்?

24. கடவுளைத் தரிசிக்கத் தரகனாக இருப்பவன் யார்?

25. தென்னாட்டானைச் சுரண்டுபவன் யார்?

26. மதவெறி பிடித்து மதிகெட்டுத் தகாத காரியம் செய்தலைபவன் யார்?

27. தர்ப்பைப் புல்லையும், பஞ்சாங்கத்தையும் காட்டி, இன்றும் ஏமாற்றுபவன் யார்?

28. நீ சுவாமி என்று கும்பிட்டால் இடதுகையை நீட்டி உன்னை அவமதிப்பவன் யார்?

29. பெண்களை ஆடல், பாடல் கற்பித்து சினிமாவில் சேர்த்துப் பணம் சம்பாதிப்பவன் யார்?

30. கெஞ்சிக் கூத்தாடி லஞ்சங் கேட்கும் பஞ்சாங்கம் யார்?

31. இந்திப் படிப்பைக் கட்டாயப் பாடமாகக் கொணர்ந்தது யார்?

32. நான்கு சாதிகளை உண்டு பண்ணியவன் யார்?

33. மதவெறி பிடித்தலையும், மடையனும், முட்டாளும் யார்?

34. முதல் சாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்பவன் யார்?

35. தொழிலாளி கூலி கேட்டதற்கு மலபார் போலீசை விட்டு அடித்தது யார்?

36. வில் வித்தை கற்ற ஏகலைவன் கட்டை விரலை நறுக்கிக் கொடுக்கும்படி கேட்டவன் யார்?

37. வேதம் ஓதிப் பாதகம் விளைவிப்பவன் யார்?

38. நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்மிடம் வரி வாங்குபவன் யார்?

39. ஹரிஜன சகோதரரை அக்ரகாரத்துக்குள் விடாமல் தடுப்பவன் யார்?

40. சாதி வேறு, சமயம் வேறு, கலை வேறு என்பவன் யார்?

41. சாதியைக் கடவுள் படைத்தார் என்று சொல்லி தர்ப்பை ஏந்துங் கை வாளுமேந்தும் என்றவன் யார்?

42. உலகம் போற்றும் உத்தமர் காந்தியாரைச் சுட்டுக் கொன்றது யார்?

43. காந்தியார் இறந்த தினத்தன்று மிட்டாய் வழங்கியது யார்?

44. காந்தியாருக்கு ராம் தூன் பசனை பண்ணி ஓலமிட்டழுதது யார்?

45. காந்தியார் கொலை வழக்குகளை பிரசுரிக்கக் கூடாதென்பவன் யார்?

46. காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை இருட்டடிப்பு செய்துவிட்டது யார்?

47. காந்தியார் கொலைக்கு நியாயம் வழங்கும்படி கேட்ட கழகத்தவர்களைத் தடை உத்தரவு போட்டுச் சோதனையிட்டவன் யார்?

48. சரித்திர ஆதாரப்படி அன்றிலிருந்து கொலை செய்து வரும் கூட்டம் எது?

49. திராவிடனைத் தலையெடுக்கவொட்டாமல் தட்டி விட்டுக் கொண்டிருப்பவன் யார்?

50. திராவிடச் சம்புகன் தலையை வெட்டி ஆரியப் பிள்ளையைப் பிழைக்க வைத்தது யார்?

51. காந்தியாரைக் கொலை செய்த விநாயகக் கோட்சே கூட்டம் எது?

52. காந்தியார் சதியாலோசனை சம்பந்தப்பட்ட ரிக்கார்டுகளைக் களவாடியவன் யார்?

53. அடுத்துக் கெடுப்பதில் அசகாயசூரனாய், கூடியிருந்து குடி கெடுப்பவன் யார்?

54. தஞ்சை நாயக்கர் வம்சத்தை வேற்றரசரிடம் காட்டிக் கொடுத்தவன் யார்?

55. சமணர்களைக் கழுவேற்றியது யார்?

56. சந்திர குப்தனுக்கு சாம்ராச்சியம் கிடைக்கும்படி செய்தது யார்?

57. நவ நந்தர்களின் ஆட்சியை வேரறுத்தவன் யார்?

58. சிறுத்தொண்டனைப் பிள்ளைக்கறி சமைத்துக் கேட்டது யார்?

59. வல்லாள மகாராசாவின் மனைவியைப் பெண்டாளக் கேட்டது யார்?

60. அசோக வம்சத்தரசரை அழித்தவன் யார்?

61. சைவனுக்குக் கந்தபுராணமும், வைஷ்ணவனுக்கு இராம புராணமும் கட்டியது யார்?

62. தேவடியாள் வீட்டில் தரகனாக இருப்பவன் யார்?

63. தாசிகளுக்குப் பரதநாட்டியம் கற்றுக் கொடுப்பவன் யார்?

64. அரிச்சந்திரனைப் பொய் சொல்லும்படி படாதபாடு படுத்தியது யார்?

65. திராவிட மக்களை ஏமாற்றிப் பிழைக்க வந்த கூட்டம் எது?

66. பல காமாந்தகாரக் கடவுளர்களையுண்டு பண்ணி யது யார்?

67. நம்மைப் பல சாதிகளாக்கி மொழி, கலை, நாகரீகம், வாணிபம் ஆகிய பல துறைகளிலும் வீழ்ச்சியுறச் செய்தது யார்?

68. எண்ணத் தொலையாத கடவுளை உண்டாக்கி எழுதியது யார்?

69. கடவுளுக்கும் மனைவி, கூத்தி, பிள்ளை குட்டிகள் இருப்பதாக எழுதியவன் யார்?

70. எவ்விதத் தொடர்புமின்றிச் சாஸ்திர ரீதியாகப் பிரித்து வைத்தது யார்?

71. காந்தியார் கொலைக்கு முன் திருவுளச் சீட்டுப் போட்டு ஒத்திகை நடத்திய கூட்டம் எது?

 

அனைத்திற்கும் விடை: பார்ப்பனர்கள்

நன்றி:- “குடி அரசு” 22-1-1949

புதுச்சேரியிலிருந்து வெளிவரும் கரந்தடி இதழ் சார்பாக 11.10.2009 ஞாயிறு அன்று துளிப்பா(ஐக்கூ),நகைத்துளிப்பா(சென்றியு),உரைத்துளிப்பா(ஐபுன்),ஈறுதொடங்கித் துளிப்பா(ஐக்கூ அந்தாதி),இயைபுத் துளிப்பா(லிமரிக்கூ) ஆகியன குறித்த ஒருநாள் ஆய்வரங்கு நடைபெற உள்ளது. மேற்குறித்த தலைப்பில் ஆய்வுக்கட்டுரை படிக்க விரும்புவோர் புதுவைப் பாவலர் சீனு.தமிழ்மணி அவர்களிடம் செல்பேசியில்(+91 94436 22366)தொடர்புகொள்ளலாம்.அயல் நாட்டினர் கட்டுரை அனுப்ப விரும்பினால் முனைவர் மு.இளங்கோவன் மின்னஞ்சல் muelangovan@gmail.com முகவரிக்குக் கட்டுரையை அனுப்ப ஆய்வரங்க அமைப்பாளரிடம் கட்டுரையை ஒப்படைப்பார்.

தொடர்புகளுக்கு ஏற்பப் பெயரை அழைப்பிதழில் இணைக்க முடியும். ஆய்வுக்கட்டுரைகள் நூல்வடிவம் பெற உள்ளன.

அஞ்சல் முகவரி:

பாவலர் சீனு.தமிழ்மணி

ஆசிரியர்-கரந்தடி,

50,நிலையத்தெரு,சண்முகாபுரம்,

புதுச்சேரி-605 009,இந்தியா

குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்தகுற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறைவாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும்கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன்தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது..

நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால்,எனது நாடு இன்னமும் போர்க் கைதியாகசிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல்குறித்தும், செயல்பட்டவர் குறித்தும்,நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மைவாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும்,குறியீடான செயல் குறித்தும் நிறையப்பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனதுஎளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தைஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான்,என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.

கடந்த சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பின் துப்பாக்கிரவைகளுக்கு இரையாகி பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தமது இன்னுயிரைஇழந்தார்கள். கணவனை இழந்த ஐம்பது இலட்சம் பெண்களும், உடல் உறுப்புகளை இழந்தஆயிரக்கணக்கான மக்களும் நிறைந்து கிடக்கும் தேசம்தான் இன்றைய இராக். நாட்டுக்குள்ளும்,வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள் அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள்.துருக்கியர்,அசிரியர், சபியர், யாசித் என அனைவரோடும் தனது அன்றாட உணவை அரபு இனத்தவன் பகிர்ந்துண்டஒரு தேசமாக நாங்கள் வாழ்ந்திருந்தோம். சன்னியுடன் ஷியா ஒரே வரிசையில் நின்று வழிபட்டகாலமது. கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள்அவை. இவையனைத்தும் பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே,பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட நீடித்திருந்தன.எமது பொறுமையும், ஒற்றுமையும்ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன. ஆனால், ஆக்கிரமிப்போ சகோதரர்களையும்,நெருக்கமானவர்களையும் பிரித்துத் துண்டாடியது.

எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.நான்நாயகனல்ல. ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு. ஒரு நிலைப்பாடு உண்டு. எனது நாடுஇழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது, எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது, எனதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது, நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன்.ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள் எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன.என்னை போரிடத் தூண்டின. இழிவுபடுத்தப்பட்ட அபுகிரைப்…பலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம்,பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர் என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்… ஒருஅங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடு… எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து,நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் கண்ணால் கண்டேன். துயருற்றவர்களின் ஓலத்தை,அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன். ஒரு அவமானம் என்னை அழுத்திவாட்டியது. நான் பலவீனனாக உணர்ந்தேன்.

அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும் ஒருதொலைக்காட்சி நிருபராக, எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால்,தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின் இடிபாடுகளின் தூசியையோ அல்லது ஆடைகளில்படிந்த இரத்தக் கறைகளையோ, நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில், பற்கள் நெறுநெறுக்க,பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால் பழிக்குப் பழி வாங்குவேனென நான் உறுதிமொழிஎடுத்துக் கொள்வேன்.

வாய்ப்பு வழிதேடி வந்தது. நான் அதனைக் கைப்பற்றிக்கொண்டேன்.ஆக்கிரமிப்பினூடாகவும், ஆக்கிரமிப்பின் விளைவாகவும் சிந்தப்பட்ட அப்பாவிகளின்ஒவ்வொரு இரத்தத் துளிக்கும், வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும், துயரத்தில்முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும், பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்டபெண்களின் அலறலுக்கும், நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதியதனால்தான் அச்செயலைசெய்தேன்.

என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது: “நான் வீசியெறிந்த காலணி, உடைந்துநொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியானஎத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? எல்லாமதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத்தோன்றுகிறது.”குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த பொழுது, எனதுநாட்டின் மீதான ஆக்கிரமிப்பை, எனது மக்களைப் படுகொலை செய்ததை, எனது நாட்டின் வளத்தைகொள்ளையடித்ததை, அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை, அதன் குழந்தைகளைஅகதிகளாக்கியதை, நான் ஏற்க மறுக்கிறேன் என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.

ஒருதொலைக்காட்சி நிருபராக, நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும், ஒருவேளைநான் பத்திரிக்கை தருமத்திற்கும் ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால், அத்தகைய நோக்கம்எனக்கு இல்லாத போதும், எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்தத்தில்,ஒவ்வொரு நாளும் தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக் காணச் சகியாத ஒரு குடிமகனின் அணையாத மனசாட்சியை வெளிப்படுத்தவே நான் விரும்பினேன்.

ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து தொழில் தர்மம் குறித்து முனகுவோரின் குரல் நாட்டுப்பற்றின் குரலைவிடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது. நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது, அதனோடு தொழில் தர்மமஇணைந்து கொள்ள வேண்டும்.எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ, காசு, பணம்கிடைக்குமென்றோ, நான் இதனைச் செய்யவில்லை. நான் எனது நாட்டைக் காக்க மட்டுமேவிரும்பினேன்.

நன்றி – http://inioru.com/?p=5660

இனிய நண்பர்களே

இலட்சியக்கவி அறிவுமதி அவர்களின்
படைப்புகளின் முழுத்தொகுப்பு மிக விரைவில் வெளிவரவுள்ளது
என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

அனைத்து விவரங்களுக்கும்
தமிழ் அலை ஊடக உலகம்
tamilalai@gmail.com
பேச// +91 9786218777

அன்பின் உறவுகளே…

தலைப்பை பார்த்ததும் ஏதோ வினா விடை பக்கம் என கருதிவிடாதீர்கள் இது உங்கள் பகுதி இதில் பொருளியல், அரசியல், உடலியல், ஆன்மீகம், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகம் என தொடங்கி அனைத்து விதமான தளங்களிலும் சிறந்த விவாதங்களை நடத்துவது மூலம்  நாம் ஒருவருக்கொருவர் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளவே  இந்த புதிய பகுதி.

வாருங்கள் விவாதிப்போம்…

சர்வதேச அளவிலான சட்டப் பூர்வமான வழிமுறைகளை கடைபிடிக்கும் இன்றைய உலகில்: நிராயுதபாணியாக நின்ற ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் பொறுப்பாளரை இரண்டு அரசுகள் கடத்திச் செல்கின்றன என்றால் சர்வதேச நீதிமுறைகள் எதற்காக?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளரும், தலைமைச் செயலருமான செல்வராசா பத்மநாதன் மலேசிய, சிறிலங்க அரசுகளின் உளவுப் பிரிவுகளின் ‘கூட்டு நடவடிக்கை’யில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து, அதனை அழிப்பதாகக் கூறி இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை அழித்தொழித்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரச பயங்கரவாத நடவடிக்கைக்கு தெற்காசிய நாடுகள் வழங்கிவரும் கண்மூடித்தனமான ஆதரவின் மற்றுமொறு வெளிப்பாடே இந்த ஆள் கடத்தல் நடவடிக்கையாகும்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகத் தான் மேற்கொண்ட இனப் படுகொலையை வெளிப்படுத்திய பத்திரிக்கையாளர்களையே வெள்ளை வேன்களில் கடத்திப் படுகொலை செய்த மகிந்த ராஜபக்சவின் ‘ஜனநாயக அரசு’, தனது கடத்தல் ஆற்றலை முதல் முறையாக இலங்கைக்கு வெளியே நடத்தியுள்ளது என்பதைத் தவிர அதன் சட்டத்திற்குப் புறம்பான இந்த நடவடிக்கையில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால் இதற்கு மலேசிய அரசும், செல்வராசா பத்மநாதன் கடத்தப்பட்டதற்கு ஒத்துழைத்ததாகக் கூறி சிறிலங்kகா வெளிவிவகார அமைச்சர் கேகலிய ரம்புக்வெலா பெயர் குறிப்பிடாமல் நன்றி தெரிவித்த மற்ற தெற்காசிய நாடுகளின் ‘ஒத்துழைப்பு’தான் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

ஒரு நாட்டிலோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட நாடுகளிலோ சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டிருக்கும் ஒருவரைக் கைது செய்ய பல்வேறு ஒப்புக் கொள்ளப்பட்ட சர்வதேச சட்ட நடைமுறைகள் உள்ளன. அதன்படி, சர்வதேச காவல் துறையின் (இண்டர்போல்) வாயிலாக எச்சரிக்கை அறிவிக்கை (Red corner notice) விடுக்கப்பட்டு அதன் மூலம் உலக நாடுகளின் ஒத்துழைப்பை பெற்று அப்படிப்பட்ட நபரை கைது செய்யும் சட்ட நடைமுறை உள்ளது. அவ்வாறு இண்டர்போல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட குற்றவாளிகள் மீதான தங்கள் முடிவை அரசுகள் மாற்றிக் கொண்டதும் நடந்துள்ளது (உதாரணத்திற்கு போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கின் முக்கியக் குற்றிவாளி ஒட்டோவியோ குட்ரோக்கி மீது இந்திய அரசின் வற்புறுத்தலால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அறிவிக்கை பிறகு இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது). இண்டர்போல் அறிவிக்கையின்படி கைது செய்யப்படும் நபரை நாடு கடத்துவதற்கும், உலக நாடுகளுக்கு இடையிலான குற்றவாளிகள் பரிமாற்ற (Extradition Treaty) உடன்படிக்கை செய்துகொள்ளும் வழமையும் உள்ளது. அப்படிப்பட்ட குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தம் இல்லாத நிலையில் அந்த நாட்டின் நீதிமன்றத்தில், கைது செய்யப்பட்ட நபரை தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்லக் கோரி சம்பந்தப்பட்ட நாட்டின் சார்பாக வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்ற ஒப்புதலோடு நாடு கடத்தப்பட்டதும் நடந்துள்ளது.

செல்வராசா பத்மநாதனை கடத்த உதவிய மலேசிய நாட்டில்தான் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளி ஒட்டோவியோ குட்ரோக்கி பதுங்கியிருந்தபோது, அவரை இந்தியாவிற்கு கொண்டுவர மலேசிய நீதிமன்றத்தில் இந்தியாவின் மத்திய புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) மனு செய்து வாதிட்டது. ஆனால், அவருக்கு எதிராக குற்றச்சாற்றிற்கு பலமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த மறுத்தது மலேசிய நீதிமன்றம். மேல் முறையீட்டிலும் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு கிட்டவில்லை. மற்றொரு உதாரணம்: 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக வழக்குத் தொடரப்பட்ட அபு சலீம். அபு சலீமிற்கு எதிராக சர்வதேச காவல் துறையின் மூலம் எச்சரிக்கை அறிவிக்கை செய்தது மத்திய புலனாய்வுக் கழகம். தனது காதலியான நடிகை மோனிகா பேடியுடன் போத்துக்கல் தலைநகர் லிஸ்பனில் இருந்தபோது சர்வதேசக் காவல் துறையால் அபு சலீமும், மோனிகா பேடியும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரையும் உடனடியாக விமானத்தில் ஏற்றி இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவில்லை போர்த்துக்கல் அரசு. சர்வதேசக் காவல் துறையும் அப்படிப்பட்ட ‘ரகசிய வேலைகளில்’ ஈடுபடுவதும் இல்லை. இருவரையும் லிஸ்பன் நீதிம்ன்றத்தில் நிறுத்தி நீதிமன்றக் காவலில் வைத்தது போர்த்துக்கல் அரசு. அவர்களை இந்தியாவிற்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து சட்ட ரீதியாக கடும் முயற்சிக்குப் பின்னரே இந்தியாவிற்கு கொண்டு வந்தது ம.பு.க. மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சலீமிற்குத் தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரங்களை ‘மிகச் சிரமப்பட்டு’க் கொண்டுவந்து தாக்கல் செய்த பின்னரே சில நிபந்தனைகளுடன் சலீமை நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது. சலீம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டாலும் அவருக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்றும், விசாரணை நடத்தும் போது சித்ரவதைக்கு ஆட்படுத்தக் கூடாது என்றும் இந்தியா சார்பில் ஒப்புதல் வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே சலீமை நாடு கடத்த லிஸ்பன் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இப்படி சர்வதேச சட்டங்களும், உடன்படிக்கைகளும் அது சார்ந்த நடைமுறைகளும் உள்ள இன்றைய உலகில், 257 பேர் கொல்லப்பட்ட மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட ஒரு தாதாவை நாடு கடத்தவே ஒப்புதல் வாக்குமூலங்களை தாக்கல் செய்து சர்வதேச அளவிலான சட்டப் பூர்வமான வழிமுறைகளை கடைபிடிக்கும் இன்றைய உலகில், ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் பொறுப்பாளரை இரண்டு அரசுகள் – மற்ற தெற்காசிய அரசுகளின் உதவியோடு – கடத்திச் செல்கின்றன என்றால் சர்வதேச நீதிமுறைகள் எதற்காக? செல்வராசா பத்மநாதனுக்கு எதிராக சர்வதேசக் காவல் துறையின் எச்சரிக்கை அறிவிக்க இருக்கின்றதென்றால், அ வரை மலேசிய நீதிமன்றத்தில் நிறுத்தி, சட்ட ரீதியாக இலங்கைக்கு கொண்டு வந்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை. ஏனென்றால் அவர் மீது கூறப்படும் குற்றச் சாற்றுகளை நிரூபிக்கக் கூடிய எந்த ஆதாரமும் இல்லை. அதனால் கொள்ளைக் கும்பல்களும், கடத்தல் பேர்வழிகளும் செய்வதைப் போல, சற்றும் வெட்கமின்றி இரு அரசுகளின் அயல் புலனாய்வு அமைப்புகளும் இணைந்து (இது மலேசிய காவல் துறைக்குக் கூட தெரிவிக்காமல் நடத்தப்பட்டதாகத் தகவல்) ஆள் கடத்தல் செய்துள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அந்த இயக்கத்தின் சர்வதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, பல்வேறு நாடுகளுடன் அரசு ரீதியான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டே செல்வராசா பத்மநாதன் செயல்பட்டு வந்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவர் தலைமறைவாக இருந்து செயல்படாமல், வெளிப்படையாகவே செயல்பட்டு வந்துள்ளார். பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இறுதிக் கட்டப் போரின்போது, தங்கள் மக்களைக் காக்க சரணடைய விடுதலைப் புலிகள் முடிவு செய்தபோது, அதற்கான நடைமுறைகளில் மனித உரிமை அமைப்புகளோடும், அரசுகளோடும் தொடர்பு கொண்டு வெளிப்படையாக பத்மநாதன் செயல்பட்டார். அப்போதெல்லாம் சர்வதேசக் காவற்படைக்குத் தெரிவித்து கைது செய்திருக்கலாமே? சட்டத்திற்குப் புறம்பாக கடத்திக் கொண்டுவந்தப் பிறகும், அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணைக்கு எடுக்காமல் மறைவிடத்திற்குக் கொண்டு சென்று விசாரிப்பதேன். விடுதலை போராட்டத்தை அழிப்பதே நோக்கம் ஏனென்றால், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட வேண்டும் என்பதே! அதைத்தான் ஒளிவு மறைவு ஏதுமின்றி “இனி விடுதலைப் புலிகள் இயக்கம் தலையெடுக்கவே முடியாது” என்று பத்மநாதன் கைது குறித்துப் பேசியுள்ள கோத்தபய ராஜபக்ச கூறியுள்ளார். “பிரபாகரனையும், அவருடைய தளபதிகளையும் சிங்கள்மும் உலக வல்லாதிக்கங்களும் பூண்டோடு அழித்த பிறகும், அயல் நாடுகளில் இருந்து செயல்படும் அரசை அறிவிக்க பத்மநாதன் தயங்கவில்லை. அவர் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் துளிர்விடும் வாய்ப்பு இருந்தது. இப்போது அதுவும் பொசுக்கப்பட்டுவிட்டது” என்று சண்டே ஒப்சர்வருக்கு அளித்த பேட்டியில் சிங்கள பெளத்த மேலாதிக்க வெறியுடன் கூறியுள்ளார் கோத்தபய ராஜபக்ச.

சம உரிமை கோரி ஈழத் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி கொச்சைபடுத்தி, அதனை ஒழித்துக் கட்டுவதாகக் கூறி, நிராயுதபாணியாக நின்ற ஐம்பதினாயிரம் தமிழர்களை கொன்று குவித்து ஒரு மாபெரும் இனப் படுகொலை நடத்தி முடித்த அரச பயங்கரவாத சிங்கள பெளத்த மேலாதிக்க அரசின் நடவடிக்கைகளை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் தெற்காசிய அரசுகள், சர்வதேச சட்டங்களையும், மனித உரிமைகளையும் புறந்தள்ளிவிட்டு மேற்கொண்டுள்ள இந்தக் கடத்தல் நடவடிக்கையை ஐ.நா.வும், சர்வதேச பொது மன்னிப்புச் சபையும் கண்டிக்க வேண்டும். தமிழர்களும் எங்கள் நாட்டு மக்கள்தான் என்று பேட்டியளித்துக் கொண்டு, முகாம்களில் முள் வேலிகளில் அடைத்து வைத்து 3 இலட்சம் தமிழர்களை மெல்ல மெல்ல கொல்லும் ஒரு பயங்கரவாத அரசின் கோர முகம் இந்த கடத்தல் நடவடிக்கை. செல்வராசா பத்மநாதன் என்ற ஒரு தமிழனின் சுய மரியாதைக்கும், கண்ணியத்திற்கும், உயிருக்கும் எந்த ஆபத்து ஏற்பட்டாலும் அது உலகளாவிய அளவில் தமிழனின் சுய மரியாதைக்கும், கண்ணியத்திற்கும் விடப்பட்ட சவாலாகவும் அதன் எதிர்வினை சட்டத்தின் மீதும், மானுட மாண்புகளின் மீதும் தமிழருக்கு உள்ள நம்பிக்கையையும், ஐ.நா. போன்ற பன்னாட்டு அமைப்புகளின் மீதான நம்பிக்கையையும் குறைத்துவிடும் என்பதை உலக நாடுகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

செல்வராசா பத்மநாதனை ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடைய ஒரு அரசியல் தலைவராகவே கருதி சட்டத்திற்கு உட்பட்டு நடத்துவதை உலக நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும். சர்வதேச சட்டங்களை புறந்தள்ளிவிட்டு சிறிலங்காவும், மலேசியாவும் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு ஐ.நா. விளக்கம் கோர வேண்டும். இன்று தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சிறிலங்கா, மலேசியா போன்ற தமிழர் விரோத அரசுகள் செய்யும் நடவடிக்கை அதற்குரிய எதிர்வினையை உண்டாக்கும் என்பதை புரிந்து கொண்டு உலக நாடுகளும், ஐ.நா.வும் செயல்பட வேண்டும்.

நன்றி: சாணக்கியன் (Geneva Tamil எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை)

வழங்கப்படாத
போலிச்சுதந்திரம்
இதுவரை
யாராலும்
யாருக்கும்
வழங்க முடியாத
உண்மைச்சுதந்திரம்
கோடிக்கோடியாய்
இனப்பெருக்கம்
செய்து தேடியும்
கண்டுபிடிக்க முடியவில்லை
இருட்டில் வாங்கியதால்
எமக்கு இன்னும்
எட்டவில்லை
எட்டவும் எட்டாது
அதனால் வேண்டும்
இன்னொரு சுதந்திரம்
இதை வாங்கமாட்டோம்
பிடுங்குவோம்

அடுத்த பக்கம் »