உலக மதவாதிகளே…

உலக மதவாதிகளே உங்கள் மதங்கள் எதைபோதிக்கின்றன உங்களுக்கு

 

திரும்பும் திசையெல்லாம் தெய்வம் என்கிறீர்களே

ஈழத்தில் யார் உங்கள் தெய்வம் சிங்கள இராணுவமா?

சின்னாபின்னமாகும் தமிழினமா?

 

அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்கிறீர்களே

அப்படியெனில் என் உறவுகளின் தலையில் விழும் அத்தனை அணுவும் உங்கள் கடவுள்களா?

 

கடவுள்கள் மனங்களை தான் பார்ப்பான் என்கிறீர்களே

அப்படியெனில் தலையில் குண்டடி வாங்கியவனின் மனம்

தெரிந்ததா என்று கேட்டீர்களா?

 

கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், மனமிருந்தும் நோயாளியாய் ஆகிவிட்டனரோ உங்கள் கடவுள்கள்.

 

இங்கே பாருங்கள் எத்தனை வேதனையெனில் இந்த மடல் எழுதப்பட்டிருக்கும்.

இது ஒரு மதத்தவரை நோக்கி மட்டுமே எழுதப்படவில்லை என்பதை

உணரக்கூட தகுதியற்ற கடவுள்கள் உங்களுக்கு தேவையா?

 

“கேட்டுத்தான் கொடுப்பாயெனில் கேவலமடா முருகா…”

என்பது முருகனுக்குமட்டுமில்லை தெரியுமா?

 

எங்கே இஸ்லாம் கடைப்பிடிக்க படவில்லையோ

அங்கே முஸ்லீம்கள் இறை நிராகரிப்போறாகிவிட்டனர் என்று பொருள்.

 

எங்கே கிருத்தவம் அத்துமீறப்படுகிறதோ

அங்கே கிருத்தவர்கள் இறை எதிரிகளாகிவிட்டனர் என்று பொருள்.

 

எங்கே இந்து, பெளத்தம், யூதம்… எனத்தொடங்கி

இந்த உலகில் உருவாக்கப்பட்ட மதங்களின் கோட்பாடுகள் வெரும் சடங்குகளாக மட்டும் நின்றுவிடுகின்றனவோ அங்கெல்லாம் அதனதன் மதங்களும், கடவுள்களும், மதவாதிகளும் கழிவறையில் கிடப்பதைவிட கேவலமானவர்கள் என பொருள்.

 

சக மனிதயினம் சக மனிதயினத்தாலேயே தாக்கப்படும்போது, அழிக்கப்படும் போது, கண்டும் காணாமல் இருந்துவிட்டு, எங்கே நீங்கள் உங்கள் வணக்கங்களை தொடர்கின்றீர்களோ அது உண்மையில் வணக்க இடங்களேயல்ல…

 

நில்லுங்கள் எங்கே செல்கிறீர்கள் எல்லாவற்றையும் அவனிடத்தில் முறையிட்டுவிட்டேன் அவன் பார்த்துக்கொள்வான் என்று தன்னலப்போக்கோடு தலைகுனிந்து சென்றீர்களாயின்…

 

புரிந்துக்கொள்ளுங்கள்…………

 

இந்த கொத்தணிகுண்டுகள் ஈழமக்களுக்காக மட்டுமென தயாரிக்கப்பட்டதல்ல.

எங்கள் இனத்தை அழித்துவிட்டு மீதமிருப்பதில் உங்கள் பெயர்தான் பதியப்பட்டிருக்கிறதென்று அங்கே கைகளை, கால்களை, உறவுகளை, உடமைகளை, உயிர்களை இழந்த எம்மினத்தின் குழந்தைகள் தினம் தினம் என் கனவில் வந்து சொல்லுகின்றனர்.

 

பாசிசக் காடையர்களின் அழிப்பு பட்டியலில் உங்கள் பெயரோடு தவறாமல் உங்கள் கடவுள்களின் பெயர்களும் இடம்பெற்றிருப்பதை.

 

அன்றைய அழிப்புகளிலிருந்து உங்களையும், உங்கள் கடவுள்களையும் காப்பாற்ற மீண்டும் மீண்டும் மீண்டும் எங்கள் பிள்ளைகளே வருவர்.

தினமும் உறக்கம் களைந்து எழுந்ததும் உங்கள் தலையணைக்கடியில் கொஞ்சம் தடவிப்பார்த்துக்கொள்ளுங்கள் எங்கள் குழந்தைகளின் சதை துண்டுகள் தட்டுப்படுகிறதாவென  இல்லையெனில் நீங்கள் தாராளமாக செல்லலாம் உங்கள் இறை இல்லங்களுக்கு…

 

தட்டுப்படுமெனில்…

Advertisements
This entry was posted in ஆத்திரம். Bookmark the permalink.

2 Responses to உலக மதவாதிகளே…

 1. kavimathy சொல்கிறார்:

  வஅலைக்கும் சலாம்………

  முதலில் என் வலைப்பூவை வாசித்ததற்கும், நாகரிகமாக மடல் எழுதியதற்கும் நன்றி.

  நீங்கள் குறிப்பிட்ட ”உலக மதவாதிகளே” என்கிற ஆக்கத்தில் நான் கடவுளைப்பற்றி எதுவும் கூறவில்லை. கடவுளின் பெயர்ச்சொல்லி தங்களை வளர்க்கும் போலி மதவாதிகளைதான் சாடியுள்ளேன்.

  ஏனெனில் அமைதியை எல்லா மதமும் போதிப்பதாக சொல்லுகிறார்கள், ஆனால் மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும், இனத்தின் பெயராலும்தான் இன்று வன்முறைகள் நடத்தப்படுகின்றன.

  உலகில் அநியாயம் நடக்கையில் நாம் நமக்கு நம்மதம் போதித்தப்படி தட்டிக்கேட்கவில்லையெனில் அதை சரியாக பின்பற்றவில்லை என்றுதானே பொருள். அப்படியெனில் ஒவ்வொருவரும் தங்கள் மதத்திற்கு எதிரியாகிவிடுகிறார்கள் இல்லையா?

  இதைதான் நான் கேள்விகேட்டேன்.
  அநியாயத்தை தட்டிக்கேட்காதவர்கள் தங்களின் மத நிலைப்பாடுகுறித்து தாங்களே முடிவுசெய்து கொள்ளட்டும் அவ்வளவுதான்.

  இதில் கடவுள் பற்றி நான் எங்கும் கூறவில்லை.

 2. kavimathy சொல்கிறார்:

  அஸ்ஸலாமு அலைக்கும்

  என் பெயர் இஹ்சான், நானும் பரங்கிபேட்டைதான்.கீழ்க்கண்ட லின்க்கில் உங்கள் கவிதைகளை பார்த்தேன். (https://kavimathy.wordpress.com/). ஈழ தமிழர்களுக்கு அங்கு நடக்கும் கொடுமைகளை நன்றாக புரிய வைத்துள்ளீர்கள்.

  “உலக மதவாதிகளே” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கவிதையை படித்தேன். அதில் கடவுளைப்பற்றி நீங்கள் என்ன சொல்ல்கிறீர்கள் என்று என்னால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்கள் சற்று விளக்கமாக சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.

  விரைவில் எனக்கு பதில் அனுப்புவீர்கள் என்று எதிர்பார்கின்றேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s