Monthly Archives: ஏப்ரல் 2009

தற்கொலை செய்துகொள்வேன் -கவிமதி

போராடவேண்டாம் என்று என்னை நீங்கள் கட்டாயப்படுத்தக்கூட வேண்டாம் எம் மக்களில் ஒருவருக்கேனும் உங்களால் விடுதலை காற்று கிடைத்துவிடட்டும் அடுத்த கணம் நானே தற்கொலை செய்துகொள்வேன் Advertisements

Posted in கவிமதி கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

மனிதத்தை காக்க வேண்டும்.-இப்னு ஹம்துன்

இவ்வூரில் இவ்விடத்தில் இன்னார் மகவாய் ….எனவிரும்பி பிறக்கத்தான் யாரால் ஏலும்? *1எவ்வூரும் எமதூரே* என்றான் தமிழன் ….*யாவரையும் கேளிர்*தான் என்று கொண்டான் அவ்வாறே அறிந்திருந்தும் ஆசை இழுக்க ….அரசியலின் அவலத்தில் வீழும் மாந்தர் வெவ்வேறு காரணத்தை கற்பிக் கின்றார் ….வேறுபாட்டில் ஆதாயம் தேடு கின்றார். *2ஒன்றலவோ குலமென்றான் *ஓதி வைத்தான்* ….ஒருவன்தான் தேவனென்*ற உண்மை சொன்னான் *நன்றிதனை … Continue reading

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

பரங்கிப்பேட்டை-சில குறிப்புகள்-இப்னு ஹம்துன்.

தாய்நாட்டு அந்நியர்களின் வாழ்வியல் சந்தையான இவ்வூருக்கான பெயர் நியாயத்துக்கு,  ‘தூக்கம் கெட்டுவிடுமோ’ என்ற கவலையால் தொடர்வண்டி நிலையத்தைத் தள்ளிவைக்கச் சொன்னதாகச் சொல்லப்படும் முன்னோர்களின் ஈசா,மூசா(கர்ணப்பரம்பரைக்)கதைகள் போதாமையாக இருந்தாலும், தமிழில் பேட்டை என்றால் சந்தை; பரங்கிப்பேட்டை என்பதன் பொருள் ‘அந்நியர் (வெள்ளையர்)களின் சந்தை’யே. ஒருவகையில்  அப்போது நாடு இருந்த நிலையின் குறியீட்டுப் பெயர் எனலாம். அதாவது, அன்றைக்கு … Continue reading

Posted in மீள்பதிவு கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தெய்வ குற்றம் -கவிமதி

வழிபாட்டுக்கு நான் வராத தருணங்களில் வானம் என் தலையில்  விழுந்துவிட்டாலோ   பூமி பிளவில் என்னை விழுங்கிவிட்டாலோ இருதய அதிர்வில் நான் இறந்துவிட்டாலோ    இன்னபிற நிகழ்வுகளால் எதையேனும் நான் இழந்துவிட்டாலோ   மறந்தும் சொல்லிவிடாதீர் அது மறுத்தலின் தண்டனைதானென்று

Posted in கவிமதி கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

கோடானுகோடி எலும்புக் கூடுகள் -கவிமதி

“புதைந்து கிடக்கும் கோடானுகோடி எலும்புக் கூடுகள் மீது அமைதியாக உறங்கி எழும் நாம் யார்?” –   என்று கவிஞர் அழகு நிலா நம்மை நோக்கி எழுப்பும் கேள்விக்கு நாம் தலையை குனிந்துகொள்வதை தவிர எதும் செய்ய இயலாத நிலையில் இருப்பதுதான் மனிதயினத்தின் உட்சநிலை ஒதுங்குதல் எனலாம். ஒரு குண்டூசி குத்தினாலே பத்துநாளைக்கு வலியிருக்கும், குண்டுகள் … Continue reading

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

நீர்த்துப்போன ஈழப்பிரச்னை ஓர் அலசல் -கவிமதி

நியாயமான போராட்டங்களை கலவரமாக மாற்றி நீர்த்துப்போகச் செய்தல்,போராடுபவர்களின் பக்கமே பிரச்னையை திசைதிருப்பிவிட்டு போராடுபவர்களை குற்றவாளிகூண்டில் ஏற்றிவிடுவது; முதலில் அதிலிருந்து அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை உருவாக்கிவிடுவது; அவர்கள் எதற்காக தொடங்கினார்களோ அந்தப் புள்ளியை விட்டு அவர்களை வெகுதூரத்திற்கு கடத்திச்சென்று மறக்கடித்து,மழுங்கடித்துவிடுவது; அதன் பின் அவர்களின் மீதே தவறென்று மீண்டும் மீண்டும் கொளுத்திவிட்டு குளிர்காயும் உத்தியைக் … Continue reading

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக