Monthly Archives: மே 2009

மறந்த தமிழினத்திற்கு மீண்டும் முத்துக்குமார்

தீக்குளிக்கும் முன்பு முத்துக்குமார் அளித்த மரண வாக்குமூலம் “தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கை, கிட்டத்தட்ட அவரது மரண வாக்குமூலமாக அமைந்துள்ளது. முத்துக்குமார் விநியோகித்த துண்டு அறிக்கையின் முழு விவரம்: விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை… அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே… வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் … Continue reading

Posted in ஆத்திரம் | 1 பின்னூட்டம்

தமிழர் ஒருங்கிணைப்பு

தோழர்.கொளத்ததூர் மணி (தலைவர் பொதுச்செயலாளர் பெரியார் திராவிடர் கழகம்) தோழர். பெ.மணியரசன் (தமிழ் தேசப்பொதுவுடைமை இயக்கம்) தோழர். தியாகு  (தமிழ்தேசிய விடுதலை இயக்கம்)  நாள்: 24.05.09    திருச்சிராப்பள்ளியில் தமிழர் ஓருங்கிணைப்பு அமைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தோழர்கள் கொளத்தூர் தா.செ.மணி, பெ.மணியரசன். தியாகு ஆகியோர் கலந்து கொண்டனர்.   ஈழத்தமிழர்கள் உயிரையும். உரிமையையும் காக்க … Continue reading

Posted in அறிவிப்புகள் | 1 பின்னூட்டம்

எங்கு நீ இருக்கிறாய்-கவிமதி

எமக்குத் தெரியும் எங்கு நீ இருக்கிறாய்  என்பது   அவர்கள் காட்டிய முகம் அவர்கள் காட்டிய உடல் இதிலெல்லாம் இல்லாதவன் எங்கிருப்பாய் என்பது எமக்குமட்டுமே தெரிகிறது   நீ அடிக்கடி சொல்வாயே எங்கெல்லாம் பேரினவாதம் நடக்கிறதோ அங்கெல்லாம் இருப்பேன் என அப்படியெனில் இங்குதான் இருக்கிறார்…   பின் எவனுக்கும் தெரியவில்லையே…   அதெப்படி தெரிவேன் பகையை மூட்டியவனுக்கும் … Continue reading

Posted in கவிமதி கவிதைகள் | 1 பின்னூட்டம்

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்குப் பதிவு

ஆஸ்லோ: தமிழ் ஈழச் சரித்திரத்தில் புகழ்பெற்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்குப் பதிவு உலகிலேயே முதல்முறையாக நார்வேயில் நடந்துள்ளது. இதில் வாக்களித்த தமிழர்களில் 99 சதவீதம் பேர், ‘சுதந்திரமும் இறையாண்மையும் அரசியல் நிர்ணய உரிமையும் கொண்ட தமிழ் ஈழ தனி அரசு தங்களுக்கு வேண்டும்’ என வாக்களித்துள்ளனர். அது என்ன வட்டுக்கோட்டை தீர்மானம்? திடீரென்று புலிகளும் … Continue reading

Posted in மீள்பதிவு கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

இந்தியாவில் தமிழ் பேசுகின்றவர்கள் இருக்கிறார்களா?’–இந்திரா பார்த்தசாரதி

நான் 1993இல் சிட்னியிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது என்னுடன் ஓர் ஆஸ்த்ரேலியாவைச் சேர்ந்த வெள்ளையர் ஒருவர் பக்கத்து இடத்தில் பயணம் செய்தார். அவர் சிங்கப்பூரில் இறங்கி ஃப்ரான் ஃப்ர்ட்( ஜெர்மனி) போவதாக இருந்தார். தம்மை அவர் அறிமுகம் செய்து கொண்டவுடன் நான் என்னை என் பெயரைச் சொல்லி இந்தியத் தமிழன் என்றும் கூறினேன்.அதற்கு அவர் கேட்ட … Continue reading

Posted in மீள்பதிவு கட்டுரைகள் | 1 பின்னூட்டம்

இளையோர் போராட்டங்களும்…இழிபிறப்புகளும்-சாத்திரி

தமிழர் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் இன்று எமது இளையோர் போராட்டங்கள் தீவிரமாகியிருக்கின்றது. எம் மக்கள் மீதான இன அழிப்பினைக் கண்டு கொதித்தெழுந்த  இளையோர்களின் போராட்டமானது  உண்ணாவிரதம். ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்றும், தனியாக இன அழி்பிற்கெதிரன போராட்டமாக மட்டுமல்லாது ஜரோப்பா, கனடா, அமெரிக்கா என்று சீரற்ற காலநிலைகளையும் எதிர்த்து மழையிலும் கொட்டும் பனியிலும் இரவு பகலாக தொடர்ந்து … Continue reading

Posted in மீள்பதிவு கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

பேராசிரியர் பெரியார்தாசன் பேச்சு

தனித்தனி அழைப்புகளால் வந்தவர்களாலேயே நிறைந்துவிட்டிருந்தது அரங்கு. சில நாள்களாக ரியாத்தில் மையங்கொண்டிருக்கும் பெரியார்தாசன் என்னும் பேச்சுப்புயலில் தங்களுக்கான/தங்கள் சமூகத்திற்கான அறிவுரை மழையை எதிர்பார்த்து தமுமுக என்கிற முஸ்லிம் பொதுமக்கள் சமூக அமைப்பு ஞாயிறு இரவு பத்தாவில் இந்தக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.  கடந்த வியாழன் இரவு, ரியாத் தமிழ்ச்சங்கத்தின் பொன்மாலைப் பொழுதிலும், மறுநாள் எழுத்துக்கூடத்தின் வெள்ளிமாலையிலும்  பேராசிரியரின் … Continue reading

Posted in மீள்பதிவு கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக