எங்கு நீ இருக்கிறாய்-கவிமதி

எமக்குத் தெரியும்
எங்கு நீ இருக்கிறாய் 
என்பது
 
அவர்கள் காட்டிய முகம்
அவர்கள் காட்டிய உடல்
இதிலெல்லாம் இல்லாதவன்
எங்கிருப்பாய் என்பது
எமக்குமட்டுமே தெரிகிறது
 
நீ அடிக்கடி சொல்வாயே
எங்கெல்லாம் பேரினவாதம் நடக்கிறதோ
அங்கெல்லாம் இருப்பேன் என
அப்படியெனில் இங்குதான் இருக்கிறார்…
 
பின் எவனுக்கும் தெரியவில்லையே…
 
அதெப்படி தெரிவேன்
பகையை மூட்டியவனுக்கும்
புகையை மூட்டியவனுக்கும் என்கிறாய்.
 
அவர்கள் காட்டிய படத்தில்
ஈழத்தை தவிர்த்து
வானத்தைப் பார்க்கிறது
உன் கண்கள்
அப்போதே தெரிந்துக்கொண்டோம்
அது நீ இல்லையென
 
நீ இருக்கும் துணிவில்
அனைத்தையும்
உன்னிடமே விட்டுவிட்டோம்
இப்போதுதான் புரிகிறது
நாங்கள் என்னசெய்ய வேண்டுமென்பது
 
எவனுக்குத் தெரியும் 
நீ எங்கு இருக்கிறாயோ
அங்கிருந்தே எங்களை
இயக்குகிறார் என்பது
 
இல்லை என்று சொல்லிக்கொண்டே
எங்களை பிளந்து பிளந்து
தேடுகிறான்
முன்பு எங்களோடு இருந்தவன்
இன்று எங்களுக்குள்
இருப்பாயோவென
 
கொஞ்ச நாளாவது
குளிர்ந்துபோகட்டும்
திடீரென்று தோன்றும் உன்னிடம்
தோற்றுப் போகவேண்டாமா
 
எமக்குத் தெரியும்
எவனுக்கும் சொல்ல அவசியமில்லை
எங்கு நீ இருக்கிறாய் என்பதை.
Advertisements
This entry was posted in கவிமதி கவிதைகள். Bookmark the permalink.

One Response to எங்கு நீ இருக்கிறாய்-கவிமதி

  1. gunasekarapandian சொல்கிறார்:

    enakkul irukkum annan eppoluthum veera prabakaranagavey iruppar. neram varumpoluthu veliye varuvar. guna

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s