பார்பனர்களின் அட்டுழியங்கள் பாரீர்

பார்பனர்களின் அட்டுழியங்கள் பாரீர் குடிஅரசு’வின் கேள்விக் கணைகள்.–ஆரியரா? அவர் அடிமைகளா? 

1. ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு நம் நாட்டிற்குப் பிழைக்க வந்தது யார்? 

2. இராமலிங்கப் பெரியாரை வெட்டிப் பலியிட்டது யார்?

3. நந்தனாரை நெருப்பிலிட்டுக் கொன்றது யார்?

4. திருப்பாணாழ்வாரைத் தீயிலிட்டுக் கொன்றது யார்?

5. யாகத்தில் ஆடு, மாடு, குதிரை, பன்றி, இவைகளைச் சுட்டுத் தின்று சுரா பானமருந்தியது யார்?

6. வருணாச்சிரம தருமத்தை ஆதரிப்பவன் யார்?

7. மனுதர்ம சாத்திரம் எழுதி நம்மை ஏமாற்றி வந்த கூட்டம் எது?

8. புராண ஆபாசக்கதைகளை எழுதி நம்மை ஏய்த்து வந்தவன் யார்?

9. திருப்பதிக்குப் போய் மொட்டையடிக்காமல் திரும்பி வருபவன் யார்?

10. மோட்ச லோகத்துக்கு வழிகாட்டி டிக்கெட் கொடுப்பவன் யார்?

11. திவசம், திதி, கருமாதி, கலியாணம், சடங்குகள் நடத்தி வைப்பவன் யார்?

12. திராவிடன் கட்டிய கோவில்களில் அதிகாரம் செலுத்தபவன் யார்?

13. திராவிடன் கட்டிய சத்திரமானிய வருமானத்தில் உண்டு களிப்பவன் யார்?

14. கஷ்டப்பட்டுக் கோயில் கட்டியது யார்? உள்ளே புகுந்து கொள்ளையடிப்பது யார்?

15. சத்திரம் கட்டியது யார்? மானிய சொத்தில், சாய்ந்து சாப்பிடுவது யார்?

16. பல சாதிகளை உண்டு பண்ணியது யார்?

17. உடன்கட்டை ஏறும்படிச் செய்து பெண்களை வஞ்சித்தது யார்?

18. திராவிடன் ஆசாரத்துடன் பக்தி பண்ணினால் கண்ணைத் தோண்டிக் காட்டில் விட்டவன் யார்?

19. திராவிடன் ஆரியப் பாஷையைப் பேசியதற்காக நாக்கை அறுத்தது யார்?

20. திராவிடனை அரக்கனாகவும், சூத்திரனாகவும், குரங்காகவும் எழுதிவைத்தவன் யார்?

21. திராவிட இனத்தவரை முன்னுக்கு வரவொட்டாமல் முட்டுக்கட்டை போடுவது யார்?

 22. திராவிட நாட்டுப் பிரிவினையைக் கூடாதென்று கொக்கரிப்பவர் யார்?

23. உழைப்பின்றி ஊரார் உழைப்பில் உண்டுகளிப்பவன் யார்?

24. கடவுளைத் தரிசிக்கத் தரகனாக இருப்பவன் யார்?

25. தென்னாட்டானைச் சுரண்டுபவன் யார்?

26. மதவெறி பிடித்து மதிகெட்டுத் தகாத காரியம் செய்தலைபவன் யார்?

27. தர்ப்பைப் புல்லையும், பஞ்சாங்கத்தையும் காட்டி, இன்றும் ஏமாற்றுபவன் யார்?

28. நீ சுவாமி என்று கும்பிட்டால் இடதுகையை நீட்டி உன்னை அவமதிப்பவன் யார்?

29. பெண்களை ஆடல், பாடல் கற்பித்து சினிமாவில் சேர்த்துப் பணம் சம்பாதிப்பவன் யார்?

30. கெஞ்சிக் கூத்தாடி லஞ்சங் கேட்கும் பஞ்சாங்கம் யார்?

31. இந்திப் படிப்பைக் கட்டாயப் பாடமாகக் கொணர்ந்தது யார்?

32. நான்கு சாதிகளை உண்டு பண்ணியவன் யார்?

33. மதவெறி பிடித்தலையும், மடையனும், முட்டாளும் யார்?

34. முதல் சாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்பவன் யார்?

35. தொழிலாளி கூலி கேட்டதற்கு மலபார் போலீசை விட்டு அடித்தது யார்?

36. வில் வித்தை கற்ற ஏகலைவன் கட்டை விரலை நறுக்கிக் கொடுக்கும்படி கேட்டவன் யார்?

37. வேதம் ஓதிப் பாதகம் விளைவிப்பவன் யார்?

38. நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்மிடம் வரி வாங்குபவன் யார்?

39. ஹரிஜன சகோதரரை அக்ரகாரத்துக்குள் விடாமல் தடுப்பவன் யார்?

40. சாதி வேறு, சமயம் வேறு, கலை வேறு என்பவன் யார்?

41. சாதியைக் கடவுள் படைத்தார் என்று சொல்லி தர்ப்பை ஏந்துங் கை வாளுமேந்தும் என்றவன் யார்?

42. உலகம் போற்றும் உத்தமர் காந்தியாரைச் சுட்டுக் கொன்றது யார்?

43. காந்தியார் இறந்த தினத்தன்று மிட்டாய் வழங்கியது யார்?

44. காந்தியாருக்கு ராம் தூன் பசனை பண்ணி ஓலமிட்டழுதது யார்?

45. காந்தியார் கொலை வழக்குகளை பிரசுரிக்கக் கூடாதென்பவன் யார்?

46. காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை இருட்டடிப்பு செய்துவிட்டது யார்?

47. காந்தியார் கொலைக்கு நியாயம் வழங்கும்படி கேட்ட கழகத்தவர்களைத் தடை உத்தரவு போட்டுச் சோதனையிட்டவன் யார்?

48. சரித்திர ஆதாரப்படி அன்றிலிருந்து கொலை செய்து வரும் கூட்டம் எது?

49. திராவிடனைத் தலையெடுக்கவொட்டாமல் தட்டி விட்டுக் கொண்டிருப்பவன் யார்?

50. திராவிடச் சம்புகன் தலையை வெட்டி ஆரியப் பிள்ளையைப் பிழைக்க வைத்தது யார்?

51. காந்தியாரைக் கொலை செய்த விநாயகக் கோட்சே கூட்டம் எது?

52. காந்தியார் சதியாலோசனை சம்பந்தப்பட்ட ரிக்கார்டுகளைக் களவாடியவன் யார்?

53. அடுத்துக் கெடுப்பதில் அசகாயசூரனாய், கூடியிருந்து குடி கெடுப்பவன் யார்?

54. தஞ்சை நாயக்கர் வம்சத்தை வேற்றரசரிடம் காட்டிக் கொடுத்தவன் யார்?

55. சமணர்களைக் கழுவேற்றியது யார்?

56. சந்திர குப்தனுக்கு சாம்ராச்சியம் கிடைக்கும்படி செய்தது யார்?

57. நவ நந்தர்களின் ஆட்சியை வேரறுத்தவன் யார்?

58. சிறுத்தொண்டனைப் பிள்ளைக்கறி சமைத்துக் கேட்டது யார்?

59. வல்லாள மகாராசாவின் மனைவியைப் பெண்டாளக் கேட்டது யார்?

60. அசோக வம்சத்தரசரை அழித்தவன் யார்?

61. சைவனுக்குக் கந்தபுராணமும், வைஷ்ணவனுக்கு இராம புராணமும் கட்டியது யார்?

62. தேவடியாள் வீட்டில் தரகனாக இருப்பவன் யார்?

63. தாசிகளுக்குப் பரதநாட்டியம் கற்றுக் கொடுப்பவன் யார்?

64. அரிச்சந்திரனைப் பொய் சொல்லும்படி படாதபாடு படுத்தியது யார்?

65. திராவிட மக்களை ஏமாற்றிப் பிழைக்க வந்த கூட்டம் எது?

66. பல காமாந்தகாரக் கடவுளர்களையுண்டு பண்ணி யது யார்?

67. நம்மைப் பல சாதிகளாக்கி மொழி, கலை, நாகரீகம், வாணிபம் ஆகிய பல துறைகளிலும் வீழ்ச்சியுறச் செய்தது யார்?

68. எண்ணத் தொலையாத கடவுளை உண்டாக்கி எழுதியது யார்?

69. கடவுளுக்கும் மனைவி, கூத்தி, பிள்ளை குட்டிகள் இருப்பதாக எழுதியவன் யார்?

70. எவ்விதத் தொடர்புமின்றிச் சாஸ்திர ரீதியாகப் பிரித்து வைத்தது யார்?

71. காந்தியார் கொலைக்கு முன் திருவுளச் சீட்டுப் போட்டு ஒத்திகை நடத்திய கூட்டம் எது?

 

அனைத்திற்கும் விடை: பார்ப்பனர்கள்

நன்றி:- “குடி அரசு” 22-1-1949

Advertisements
This entry was posted in மீள்பதிவு கட்டுரைகள். Bookmark the permalink.

5 Responses to பார்பனர்களின் அட்டுழியங்கள் பாரீர்

 1. najera சொல்கிறார்:

  mikavum sariyan karuthu

 2. நெற்குப்பை தும்பி சொல்கிறார்:

  NO REACTION TO MY ABOVE COMMENTS !!!

  CASTELESS SOCIETY CAN EMERGE ONLY IF ALL SECTIONS OF THE SOCIETY IMBIBE THE SPIRIT; BY SINGLING OUT THE PAPAANS, WE CAN NOT REACH OUR GOAL.

  WE AWAIT ANOTHER PERIYAAR TO ACHIEVE THIS.

 3. நெற்குப்பை தும்பி சொல்கிறார்:

  சரி எல்லாவற்றுக்கும் விடை பார்ப்பனர் தான்.

  கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளிலே சாதியைப்பற்றி ஐயா பெரியார் தமிழகத்திலும், அம்பேத்கார் அகில இந்தியாவிலும் சொன்ன கருத்துக்கள் ஓரளவுக்கு/ பெருமளவுக்கு பெரும்பான்மையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சாதி பிரிவனை இருக்கக் கூடாது; சாதியற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்று தம் மனத்தளவிலாவது நினைப்பது உண்மை. ரெட்டைக் குவளை கண்டு மனதுக்குள் பொருமும் மக்கள் எண்ணிக்கையில் மிக அதிகம். அதற்காக பெரியாருக்கும் அம்பேத்காருக்கும் இந்த நாட்டு மக்கள் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும்.

  அதே சமயம், ஒரு சின்ன மனத்தாங்கல் : சாதி என்ற சனியனைத் தோற்றுவித்த பார்ப்பனர்களை விடவும், பிற “உயர்ந்த சாதி மக்கள் ” சாதியை பிடித்து தொங்கிக்கொண்டு, சாதியற்ற சமூகம் உருவாக தடை போடுகிறார்கள் என்பது ஒரு வாதம். திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்பும், தமிழகத்தில் சாதி பிரிவினைகள் கொடியோச்சி நிற்பதில் தற்போது ஆட்சியில் இருக்கும், பிற சாதிக்காரர்களும், அரசு அலுவல்களில் உள்ள பிற சாதிக்காரர்களும் தான் என்று கருதும் நிலை உள்ளது.

  அதாவது, பார்ப்பனர்களை அடக்கிய அளவு மற்ற “உயர்ந்த சாதி”க்காரர்களை வழி நடத்த தவறி விட்டோமோ என்று ஒரு ஐயம்.

  போர் நடக்கும் பொது, சமயத்துக்கு ஏற்ப, உத்திகளை சீரமைத்து, போரைத் தொடர வேண்டும். இந்த காலக் கட்டத்தில், சாதி பிரிவினையை தூண்டும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை அடக்கி வைக்க வேண்டும்.

  இதற்கு பதிவுலக அன்பர்கள் கருத்து எழுதினால் மிக மகிழ்ச்சி அடைவேன்.

 4. முத்தமிழ் சொல்கிறார்:

  காவிரிமைந்தன்
  2009ற்கு வந்ததால் தான் ஊத்தாபுரம் சுவர் பற்றியும்,திண்ணியம் நிகழ்வுபற்றியும் பேசுகிறோம்
  இன்னும் நீங்கள் எல்லாம் மனுவை பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள். எனவே உங்களைப்போன்றவர்கள் தான் 2009க்கு வரவேண்டும்.

 5. காவிரிமைந்தன் சொல்கிறார்:

  இன்னும் 1949 லேயே இருக்கிறீர்களே தோழரே !

  நகர்ந்து வாருங்கள் – 2009 க்கு.
  புதிய பார்ப்பனர்கள் நிறைய பேர் வந்திருக்கிறார்கள்.
  அவர்களை எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள் !

  – தோழமையுடன் – காவிரிமைந்தன்

  http://vimarisanam.wordpress.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s