சார்ஜாவில் பெரியார் நினைவேந்தல்

புலம்பெயர்ந்த மக்களில் விடுமுறை நாட்களை அவரவர் தன்நல போக்கிற்காவே கழித்துக்கொண்டிருக்கும் சூழலில் தங்களுக்காக எத்தனையோ வெள்ளிக்கிழமைகள் இருக்கின்றன நம் சமூகத்திற்காக ஒரு வெள்ளிக்கிழமையை ஒதுக்கலாம் என அபுதாபி வாழ் வடநாட்டு தலித் மக்களை ஒருங்கிணைத்து நிகழ்வுகளை நடத்திவருவது அபுதாபி அம்பேத்கர் சர்வதேச அமைப்பு. நேற்று (16 அக்டோபர்) அன்று சார்ஜாவில் கடந்த ஆண்டுகளைப்போல் இந்த ஆண்டும் “சம்மசக்ர பிரவார்தன தீன்” என்கிற அம்பேத்கர் நினைவுநாளை கொண்டாடினார்கள்.

இப்படி அம்பேத்கர் பற்றி மட்டுமே நிகழ்வுகளை நடத்திக்கொண்டிருந்தவர்களுக்கு தங்களின் முதல்வர் மாயாவதி ஏன் தீடீரென்று பெரியார் என்ற ஒருவரை ஆதரிக்கிறார் அவருக்கு சிலைவைக்கிறார் என்கிற கேள்வி எழவே, பெரியார் பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் கடந்த முறை அம்பேத்கர் நிகழ்வில்போது பெரியார் சம்மந்தப்பட்டவர்களை தேடியிருக்கிறார்கள் அய்க்கிய அரபு நாட்டில் பெரியாரா? என சிலர் கிண்டலுடன் தவிர்க்க (எங்கெல்லாம் பார்ப்பனியம் இருக்கிறதோ அங்கெல்லாம் பெரியார் இருப்பார் என மறந்துவிட்டனர்போலும்) இனம் இனத்தை சேரும் என்கிற தத்துவத்தின்படி இறுதியாக நம்மிடம் வந்துசேர்ந்தனர். கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்டு அமீரகத் தாய்மண் வாசகர் வட்டம் சார்பாக நாம் களமிறங்கினோம்.

கடந்த ஆண்டு பெரியார் குறித்து அவர்களுக்கு அறிமுகம் செய்தபின் இந்த ஆண்டும் நம்மை அழைத்திருந்தார்கள் நாமும் கலந்துக்கொண்டு பெரியார் குறித்தும் அவர்தம் தலித் அரசியல் குறித்தும் பேசினோம். நிகழ்விற்கு அபுதாபியை சேர்ந்த திரு.சங்கர்ராஜ் தலைமையேற்க சிறப்புவிருந்தினராக கடையநல்லூர் திரு.சத்திஷ்மாதவன் அவர்கள் கலந்துக்கொண்டு பெரியார் குறித்து விரிவான தெளிவான உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தினார். அதை தொடர்ந்து அமைப்பின் தலைவர் திரு.சே.ரெ.பட்டணம் மணி தனக்கே உரிய முறையில் பெரியார் குறித்தும் அம்பேத்கர் குறித்தும், குறிப்பாக இரட்டைவாக்குறிமைக்கு எதிரான காந்தியின் துரோகம் குறித்தும் விரிவாக இந்தியில் உரையாற்றினார். நிகழ்வில் திரு.கவிமதி ஊத்தாபுரம் சுவர் பற்றின நிகழ்வுகளை விளக்கி தொடர்ந்து குஜராத் காந்திநகர் தலித் மக்களின் வாழ்வியல் ஆதாரங்களை கொண்டு எடுக்கப்பட்ட குறும்படத்தினையும் திரையிட்டார்.

அதை தொடர்ந்து அம்பேத்கர்,பெரியார் உறவு அவர்கள் நம் சமுதாய மேம்பாட்டிற்காக உழைத்த நிகழ்வுகள் என தமிழர்களாகி நாம் பெரியாரின் தொடர்ச்சியாக தலித் அரசியலை எவ்வாறு நடத்திக்கொண்டிருக்கிறோம் என்பதனையும் விளக்கினோம். நம் அமைப்பின் சார்பாக இறுதியாக செயலர்.திரு.முத்தமிழ்வளவன் உரைநிகழ்த்தியதன்பின் பெரியார் குறித்த தங்களது பார்வையினையும், தாங்கள் இதுவரை புரிந்துக்கொண்டவற்றையும் இனி பெரியார், அம்பேத்கர் வழியிம் நாம் நம் சமூகத்திற்கு எப்படி செயலாற்ற வேண்டும் என்பதுபற்றியும் அம்பேத்கர் அமைப்பினர் விரிவாக பேசியும், விளக்கப்படங்களை காட்டியும் நிகழ்வினை தொடர்ந்து சிறப்பாக நடத்திச்சென்றனர்.

நிகழ்வில் நிரைவாக அம்பேத்கர்,பெரியார் வாழ்த்துப்பாடலும் அதை தொடர்ந்த ஏற்புரையில் வடமாநில மக்களுக்கும் பெரியார் குறித்தும் தலித் அரசியலில் நம் பங்குகுறித்தும் நாம் விளக்கியது விரிவானதாகவும், நிறைவுடனும் இருந்ததாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நமக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்ள விழா இனிதே நிறைவுப்பெற்றது.

விழாவில் கலந்துக்கொண்ட நம்மவர்கள்

திரு.சே.ரெ.பட்டணம் மணி (தலைவர் தாய்மண் வாசகர் வட்டம்) திரு.முத்தமிழ்வளவன் (செயலர் தாய்மண் வாசகர் வட்டம்)

திரு.கவிமதி (செயலர் அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை)

திரு.சங்கர் ராஜ் (அபுதாபி ஒருங்கிணைப்பாளர் தாய்மண் வாசகர் வட்டம்)

திரு.சத்தீஷ் மாதவன் (நிகழ்வின் சிறப்பு விருந்தினர்)

ஓவியர் அசோக்,

திரு.விவேகானந்தன்,

திரு.கருணாநிதி,

திரு.குருசாமி சார்ஜா

திரு.குமார் (நாம் தமிழர் அமைப்பு)

திரு.முத்துக்குமரன் (இணைசெயலர் அ.த.க.பேரவை,

மற்றும் சிந்தனையாளர்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Advertisements
This entry was posted in பொதுவானவை. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s