தமிழ்நாடு பறையர் பேரவை பறையர் கலைத் திருவிழா நிகழ்ச்சி

தமிழ்நாடு பறையர் பேரவை பறையர் கலைத் திருவிழா நிகழ்ச்சி

நாள்: 18.09.2010 , சனிக்கிழமை நேரம் :மாலை 3 மணி முதல் இரவு 9 மணிவரை இடம் : அண்ணாமலை முத்தையா செட்டியார் அரங்கம் சென்னை.

அழிந்து வரும் பறையர்களின் வரலாறு ,கலை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் நாகரீகத்தினை மீட்டெடுக்கும் பணியில் தமிழ்நாடு பறையர் பேரவை கடந்த முப்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பெருகி வரும் ஊடகங்களினால் பறையர்களின் பாரம்பரிய கலைகள் மற்றும் பாட்டுச் சீரழிவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. பறையர் வரலாறு மற்றும் அறிவு சார்ந்த செய்திகளை மாநாடு மற்றும் பொதுகூட்டங்கள் வாயிலாக மக்களுக்கு தெரிவிப்பதை காட்டிலும் கலை வடிவில் தெரிவித்தால் வெகுஜன மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் தமிழ்நாடு பறையர் பேரவை “கலைகளையும் போர் கருவிகளாக்குவோம்” என்ற கருத்தியலோடு தமிழகமெங்கும் கலைப் பிரச்சாரம் செய்து வருகின்றது .

இதன் தொடர்ச்சியாக……. உலகப் பறையர்களின் விடிவெள்ளி மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் பறையர் அவர்களின் 150 வது பிறந்தநாளை 07 /07 /2010 ) கொண்டாடும் வகையில் சென்னையில் மாபெரும் பறையர் கலைத் திருவிழா நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சிகள்: பறையர்கள் குறித்த ஆய்வுக்கட்டுரைகள் வாசித்தல் மற்றும் அதுத் தொடர்பாக விவாதங்கள் பறையாட்டம்…… ஒயிலாட்டம்…. மற்றும இதர கலைகளும்…….

குறிப்பு: ஆர்வமுள்ள ஆய்வாளர்கள் மற்றும் கலைக்குழுக்கள் தங்களது படைப்புகளை ஒருங்கினைப்பளர்களுக்கு முன்கூட்டியே கீழ்க்கண்ட முகவரியில் தெரிவிக்கவும்.

தொடர்புக்கு அய்யா சி.சாமுவேல்பறையர் தலைவர் மற்றும் நிறுவனர் தமிழ்நாடு பறையர் பேரவை பேச :9283182969/9488380143/9944589548 samparayar@gmail.com/ Samyparai007@gmail.com http://www.paraiyar.webs.com

Advertisements
This entry was posted in அறிவிப்புகள் and tagged . Bookmark the permalink.

2 Responses to தமிழ்நாடு பறையர் பேரவை பறையர் கலைத் திருவிழா நிகழ்ச்சி

 1. S SOUNDAR சொல்கிறார்:

  2013ல் என்ன நடத்த போகிறீர் ..??

  ~ இந்தியன் ~

 2. samparayar சொல்கிறார்:

  என் இன பறையரின சொந்தங்களே உங்களை மீண்டும் இந்த மின் அஞ்சல் மூலமாக உங்களை தொடர்பு கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்

  தமிழ்நாடு பறையர் பேரவை

  பறையர் கலைத் திருவிழா மற்றும் பறையர் வரலாற்று கருத்தரங்கம்.

  நிகழ்ச்சி நாள்:

  12.02.2010 , சனிக்கிழமை

  நேரம் :

  காலை 9 முதல் மாலை 5 மணி வரை பறையர் வரலாற்று கருத்தரங்கம்.

  மாலை 6 மணி முதல் இரவு விடிய விடிய

  பறையர் கலைத் திருவிழா

  வரலாறு நெடுக்க பறையர்கள் உயர்த்த நிலையில் இருந்தும் தன்னுடைய நிலை சரியும்போது உரிமைபோரை தொடுக்கவும் தயங்கியதில்லை. தமிழகத்தில் பிராமணியத்திற்கு நேர் எதிர் என்றால் பறையர் சித்தாந்தம்தான். தமிழகத்தின் சாதிகளாக கருதப்படும் தேவர்கள், வன்னியர்கள், பள்ளர்கள் , நாடார்கள் மற்றும் இதர சாதிகளனைத்தும் பிராமணியத்தை ஏற்றுக் கொண்டுவிட்டன என்பதற்கு நிறையவே இலக்கிய சான்றுகள் உள்ளன. தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட சாதிகளாக கருதப்படும் பள்ளர்கள் மற்றும் சக்கிலியர்கள் பறையர்களுடன் நெருக்கமாக வாழ்ந்ததக வரலாறுகளில் நாம் காணமுடிவதில்லை. மாட்டுக்கறியைஇந்த இரண்டு சாதிகளும் உண்பதில்லை. ஏனென்றால் இது பறையர்களின் உணவாம். மாட்டுக்கறி உன்னுபவர்கள்தான் தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தவேண்டும் , நாங்களெலாம் மேம்பட்டவர்கள் எங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேருங்கள் என்று அரை வேக்காட்டுத்தனமாய் சில தற்குறிகள் கூறிவருகின்றனர். மேலும் பறையர்கள் போராடி பெற்றுத்தந்த இடஒதுக்கீட்டை சக்கிலியர்கள் பங்குபோடுவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனைப்பற்றியெல்லாம் ஏன் இந்த தலித்தியவாதிகள் ஆய்வு செய்ய மறுக்கின்றார்கள், மாறாக பறையர் என்றசொல்லை அழித்தொழிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பறையர் பண்பாடு என்பது தனி மற்றும் இதர சாதிகளின் பண்பாடு என்பது தனி.இதனை புரிந்து கொல்லாத தலித்திய வாதிகள் ஏன் தலித்தியத்தை கட்டமைக்க நினைகின்றனர் . இதிலிருந்தே தெரிகிறது தலித்தியம் என்பது மிகப்பெரும் எமற்றுப்பேர்வழி என்று. பிராமணியம் எவ்வாறு பறையர்களின் பண்பாட்டு அடையாளங்களை வரலாற்று மறைப்பு மூலமாக செய்து வந்ததோ அதே பணியை தலித்தியம் செய்து வருகிறது. தலித்தியம் பிராமணியத்தின் மறு வடிவம் என்று கூறினால் அது மிகையாகது. தலித்தியத்தை என்று இந்த அறைவேக்காட்டு சிந்தனையாளர்கள் பேச முற்ப்பட்டர்களோ அன்றிலிருந்தே தமிழகத்தில் சாதி முரண்பாடு அதிகமாகிக்கொண்டேதான் இருக்கின்றது. இதற்க்கு எடுத்துக்காட்டாக வத்ராப் புதுப்பட்டியில் நடக்கும் சாதிக்கலவரமே .இங்கு பல்வேறு தலித்திய எழுத்தாளர்கள் கடந்த 30 ஆண்டுகளில் உருவாகியிருப்பார்கள். இன்னும் இங்கு நடக்கும் பள்ளர் பறையர் சாதிய முரணுக்கு தீர்வு காண முடியவில்லை. இன்னும் பறையர்களுக்கென்று எஞ்சியிருப்பவை குலதெய்வ வழிபாடு, மற்றும் இதர பண்பாட்டு சடங்குகளும் மட்டுமே.பறையர்கள் பின்பற்றக்கூடிய அணைத்து சடங்குகளும் மண் மற்றும் அறிவியல் சார்ந்தவையே எனினும் பகுத்தறிவு, மூடநம்பிக்கை என்ற பெயரில் பெரும்பாலனவற்றை நாம் இழந்து விட்டோம். இனியும் நாம் இழக்க நேரிடுமானால் நமது சந்ததியினருக்கு செய்யும் துரோகம் வேறேதும் இல்லை.

  உலகில் நெல்லை கண்டுபிடித்தது அறிமுகப்படுத்தியவர்கள் சாம்புவப் பறையர்கள்தான் என்று அனைவருக்கும் தெரிந்த உண்மையே. சாம்பன் நெல் வழக்கத்தில் இருப்பதுவே இதற்க்கு சான்று.பறையர்கள் உழுவித்த நெல்லை ஊருக்கு அறிமுகப்படுத்தி கொண்டாடும் திருவிழாதான் இந்த தைத்திருவிழா, தைத்திருவிழவினை பறையர்களின் திருவிழாவாக நாம் கொண்டாடுவோமாக.

  அழிந்து வரும் பறையர்களின் வரலாறு ,கலை,கலாச்சாரம்,பண்பாடு மற்றும் நாகரீகத்தினை மீட்டெடுக்கும் பணியில் தமிழ்நாடு பறையர் பேரவை கடந்த முப்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பெருகி வரும் ஊடகங்களினால் பறையர்களின் பாரம்பரிய கலைகள் மற்றும் பாட்டுச் சீரழிவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

  பறையர் வரலாறு மற்றும் அறிவு சார்ந்த செய்திகளை மாநாடு மற்றும் பொதுகூட்டங்கள் வாயிலாக மக்களுக்கு தெரிவிப்பதை காட்டிலும் கலை வடிவில் தெரிவித்தால் வெகுஜன மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் தமிழ்நாடு பறையர் பேரவை “கலைகளையும் போர் கருவிகளாக்குவோம்” என்ற கருத்தியலோடு தமிழகமெங்கும் கலைப் பிரச்சாரம் செய்து வருகின்றது .

  ” இதனையே பறையர் கலை விழாவிற்கான அழைப்பிதழாக ஏற்றுக்கொள்ளவும் நிகழ்ச்சி நிரல் அடங்கிய பிரிதொரு அழைப்பிதழ் தனியாக அனுப்பிவைக்கப்படும் .

  முடிந்தவர்கள் தங்கள் நண்பர்களோடும் பறையர் வரலாற்றுப் படைப்புகளோடும் கலைதிறமையோடும் உள்ளவர்களை அழைத்து வந்து, தங்களின், பங்கேற்பும்,பங்களிப்பும் செயும் படி மிக்க பணிவுடன் தெரிவித்து கொள்கின்றோம் . .முடிந்தவர்கள் இதையே மற்ற நண்பர்களுக்கு அழைப்பாக அனுப்பவும்.முடியாதவர்கள், தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இத்தகவலைச் சொல்லலாம்.உலகப் பறையர்கள் அனைவரும் சங்கமிக்கும் மாபெரும் கலைத்திருவிழா.உணர்வுள்ள பறையராய் அனிதிரள்வீர்.ஆகையால் விழா சிறப்பாக நடைபெற தாங்களால் இயன்ற பொருலுதவியளித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  தொடர்புக்கு

  அய்யா சி சாமுவேல் பறையர்

  தலைவர் & நிறுவனர்.

  தமிழ்நாடு பறையர் பேரவை

  37/59திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை

  திருவல்லிக்கேணி, சென்னை-600005

  மேலும் பேச: 92831 82969/9488380143

  9944589548,9677101136
  மின் அஞ்சல் :samparayar@gmail.com samyparai007@gmail.com , parayarkural@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s