Author Archives: kavimathy

பரியேறும் பெருமாள்

ஆயிரம் கண்ணாடி ஓடுகளின் மேல் மல்லாக்க கிடத்தி தர தரவென்று இழுத்துச் செல்வதுபோல் இரணமிகுந்த “வலியினை” மீண்டும் என் முதுகில் தடவி பார்த்துக்கொண்டேன். என் தகப்பன் என் கண் முன்னே நிர்வாணமாக்கப்பட்டு நடுத்தெருவில் ஓடுகையில். இந்திய கூட்டு மனசாட்சிக்கான மாட்சிமை தாங்கிய வலிகளை திணித்தே வளைந்த முதுகுகள் எங்களது என அந்த அப்பாவி தகப்பன் கையெடுத்து கும்பிட்டு ஓடும் காட்சி.  … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

த.மு.மு.க

அன்பிற்கினிய தமுமுக தலைவர் மற்றும் நிருவாகத்தினர்களுக்கு எனதருமை சகோதர்களே… சாவின் விளிப்பில் நின்றுகொண்டிருக்கும் நம் ஈழத்தமிழ் இனத்தின் ஓலக்குரல் உங்கள் செவிகளில் எட்டவில்லையெனில் இம்மடலை தங்கள் அறிவுக்கண் கொண்டு வாசித்துவிட்டு, அதற்கு அடுத்தாற்போல் தமிழகத்தில் வாழும்  தமிழ் இஸ்லாமிய சமுதாயத்திற்கு தேவையான அடிப்படை  உரிமைக்கான  போராட்டத்தை தொடருங்கள். அதற்கு நானும் உங்களோடு முன்வரிசையில் நிற்கிறேன். கடந்த பல ஆண்டுகளாக நம் இனம் இலங்கை அரசால் கருவறுக்கப்படுவது தாங்கள் அறிந்ததே. தற்போதைய சூழலில் … Continue reading

Posted in பொதுவானவை, Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நான் விடுதலையடைந்து விட்டேன்

நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான செயல் குறித்தும் நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனது எளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தை … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பெரியாருடன் ஒரு பயணம்

சாதி, மதம், மூட நம்பிக்கைகள், சடங்குகள், ஆணாதிக்கம், பொருளாதாரச் சுரண்டல் என அனைத்து வித இழிவுகளிலும் புதையுண்டு கிடந்த சமூகத்தை அவை அனைத்திலிருந்தும் மீட்டெடுத்து தன்மதிப்பு, சகோதரத்துவம், சமத்துவமுடைய ஒரு சமூகமாக மாற்ற தன் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த ஒரு மனிதர் பெரியார். தனது 95 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் … Continue reading

Posted in அறிவிப்புகள் | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

தமிழம் வலை. www.thamizham.net

தமிழம்.வலை ( http://www.thamizham.net ) 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1. தமிழ்ப் பேழை/2. சிற்றிதழ்கள்/3. கல்வி/4. நாள் ஒரு நூல். தமிழ்ப் பேழையில் இருப்பவை… குழந்தைகளுக்கான நல்ல தமிழ்ப் பெயர்கள் (30,000 பெயர்கள்), தமிழ் வளர்க்கப் பாடுபட்ட தமிழர்களின் படங்கள் (313 படங்கள்), தமிழரின் பெருமைமிகு படைப்பாக்கங்கள் (நிகண்டு, புறநானூறு பாடல்கள்), தமிழியமான இசைப்பாடல்கள் (45 … Continue reading

Posted in அறிவிப்புகள் | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்நாடு பறையர் பேரவை பறையர் கலைத் திருவிழா நிகழ்ச்சி

தமிழ்நாடு பறையர் பேரவை பறையர் கலைத் திருவிழா நிகழ்ச்சி நாள்: 18.09.2010 , சனிக்கிழமை நேரம் :மாலை 3 மணி முதல் இரவு 9 மணிவரை இடம் : அண்ணாமலை முத்தையா செட்டியார் அரங்கம் சென்னை. அழிந்து வரும் பறையர்களின் வரலாறு ,கலை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் நாகரீகத்தினை மீட்டெடுக்கும் பணியில் தமிழ்நாடு பறையர் பேரவை … Continue reading

Posted in அறிவிப்புகள் | Tagged | 2 பின்னூட்டங்கள்

மரணத்தை வெல்வேன்!’ – பேரறிவாளன் மடல்..

‘தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்’ என்ற புத்தகம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் என்கிற அறிவு இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார். நீதியரசர்கள் வி.ஆர்.கிருஷ்ணய்யர், .சுரேஷ், பத்திரிகையாளர் குல்தீப்நய்யார், அரசியல் தலைவர்கள் வைகோ, ராமதாஸ், நெடுமாறன் ஆகியோர் அணிந்துரை எழுதி … Continue reading

Posted in மீள்பதிவு கட்டுரைகள் | Tagged | பின்னூட்டமொன்றை இடுக